உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/சுண்டெலி

விக்கிமூலம் இலிருந்து

சுண்டெலி, சுண்டெலி,
துறுது றுத்த சுண்டெலி!

பண்ட மெல்லாம் கெடுத்திடும்;
பானை சட்டி உருட்டிடும்;
கண்ட கண்ட பொருளெலாம்
கடித்து நாசம் செய்திடும்.

சுண்டெலி, சுண்டெலி,
துறுது றுத்த சுண்டெலி!

பையில் ஓட்டை போட்டிடும்;
பணத்தை இழக்கச் செய்திடும்;
கையைக் காலை இரவிலே
கடித்து என்னை எழுப்பிடும்.

சுண்டெலி, சுண்டெலி,
துறுது றுத்த சுண்டெலி!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/சுண்டெலி&oldid=1724526" இலிருந்து மீள்விக்கப்பட்டது