உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/பட்டம்

விக்கிமூலம் இலிருந்து

பறந்து மேலே சென்றிடும்
பட்டம் பார்,பார் தம்பியே.
பருந்து கூட இதனைப்போல்
பறக்கு மோநீ சொல்லுவாய்.

வாலும் உள்ள பட்டமாம்;
வாலில் லாத பட்டமாம்;
மேலும், மேலும் செல்லுதே.
‘விர்வி’ ரென்று கத்துதே.

பச்சை, நீல வர்ணமும்
பட்டம் தன்னில் காணுதே.
உச்சி மீது வானத்தை
ஓட்டை செய்யப் பார்க்குதே!

காற்ற டிக்கும் திக்கிலே,
கையும் சேர்த்தி ழுக்குதே!
பார்ப்போம் என்றே மேகத்துள்
பார், பார், தம்பி ஒளியுதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/பட்டம்&oldid=1724601" இலிருந்து மீள்விக்கப்பட்டது