பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"அறிஞர் அண்ணா
நினைவஞ்சலி"



தவத்திரு குன்றக்குடி அடிகளார் பாராட்டுரை

இனிய அன்பர், புலவர் என்.வி. கலைமணி அவர்கள் எழுதிய அண்ணா நினைவஞ்சலி என்ற நூலைப் படிக்கும் இனிய வாய்ப்புக் கிடைத்தது.

நல்ல தமிழ்நடை, குதித்து விழும் இனிய குற்றாலத்து அருவித் தமிழ் நடை, இடை நிற்காமல் நூல் முழுவதும் படிக்கத் தூண்டும் முறையில் நூலின் நடையும் பொருளும் அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

நூல் முழுதும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றியதேயாம். ஆம்! தமிழ்நாட்டுக்குத் ‘தமிழ் நாடு’ எனப் பெயர் சூட்டியும், தமிழை ஆட்சி மொழியாக்கியும், தமிழை மக்கள் மொழியாக ஆக்கியும் மகிழ்ந்த பேரறிஞர் அண்ணாவைத் தமிழாகவே எண்ணி, ‘தமிழஞ்சலியை நினைவஞ்சலி’ செய்திருப்பது நூற்றுக்கு நூறு சரி.

'அண்ணா ஒரு காலம்’ என்ற ஆசிரியரின் வரைவு. ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ஆம்! உண்மை! அண்ணா இறந்த காலமும் அல்ல; நிகழ் காலமும் அல்ல; எதிர் காலமும் அல்ல' என்ற வரிகள் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டியவை.

இடையிடையே அண்ணாவின் அரிய கருத்துக்களையும் நூலாசிரியர் தந்துள்ளார். ஜனநாயகத்தைப் பற்றி அண்ணா கூறியதை எடுத்து வைத்திருக்கிறார்.

‘ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிற நாம்,அதனின்று ஒதுங்கி விடுவதென்பது முடியாது. ஆற்றில் குதித்த பிறகு நீந்தித்தான் ஆக வேண்டும். நீந்தாவிடில், வெள்ளத்தோடு