உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

எடுத்த எடுப்பிலேயே, விடுத்தகணை ‘விர்’ரென்று பாய்கிறது பார்த்தாயா தம்பி,
அகம்பாவம்
ஆணவம்
அதிகார வெறி

எனும் கொடிய குணங்கள் குடிகொண்டவராக, சர்வாதிகாரியாக இருக்கிறார், என்று, சவுக்கடி கொடுத்த விடுதலை, மேலும் எழுதுகிறது.

“காமராஜர் யார்? அவரின் இயற்கை நிலை என்ன? எப்படி இருந்தவர்? என்ன காரணத்தால் இவர் பொது வாழ்வில் மதிக்கவேண்டியவரானார்? இன்றைய வாழ்வு இவருக்கு எப்படி வந்தது? இவருடைய பொருளாதாரம், கல்வி, பொது அறிவு, அரசியல் திறமை, தகுதி, திறமைநேர்மை, அனுபவம், ஒழுக்கம் எவ்வளவு? என்பவைகளான விஷயங்களை இவரே சிந்தித்துப் பார்ப்பாரானால், இவர் இப்போது பேசும் பேச்சுகளுக்குதான் தகுதியுடையவரா? இந்தப் பேச்சுகள் பேசுவது தன் பேரால் இருந்துவரும் பதவிக்கு ஏற்றதா என்பது விளங்குவதோடு, மிகுதியும் வெட்கப்படுவார் என்றே கருதுகிறோம்”

காமராஜர்மீது இந்தக் கடும் தாக்குதலை நடத்தினால் மட்டும் போதாது, இதில் ஒளிவு மறைவு என்ன, மக்களிடம் வெளிப்படையாகக் கூறிவிடவேண்டியதுதான், என்று தீர்மானித்து, காமராஜரின் முகமூடியைப் பிய்த்தெறிந்து, இந்த அவலட்சணத்தை நீங்களே பாருங்கள் என்று மக்களிடம் காட்டுவதுபோல, விடுதலை, மேலால் எழுதுகிறது;

“காங்கிரசானது முதல்தரமக்களிடமிருந்து பிடுங்கி மூன்றாந்தரமக்களிடம் ஒப்புவிக்கப்பட்டாலொழிய தங்களால் இந்த நாட்டில் வாழமுடியாது என்கின்ற நிலை, பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டபோது, அந்த மாதிரி நிலை பார்ப்பனருக்கு ஏற்படும்படியாக சுயமரியாதை இயக்கம் செய்துவிட்டதன் பயனாய், பார்ப்பனர்கள் தேடிப்பிடித்த ஆள்களில் ஒருவராக காமராஜர் பார்ப்பனர்களுக்குக் கிடைத்தவரே தவிர. அதற்கேற்ற காமராஜரின் தகுதி என்ன என்று சிந்திக்கப் பொது மக்களை வேண்டுகிறோம்”

தம்பி! நீயும் நானும் காங்கிரஸ் வரலாற்றிலே பெரும் பகுதியை, படித்துத் தெரிந்து கொண்டவர்கள்—பெரியார்