உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தரங்கம் புனிதமானது 41 'எப்படியும் நாளைக்கு அவரிடம் நேருக்கு நேர் உடைத்துப் பேசி விடுவது. இதில் நான் பயப்பட என்ன இருக்கிறது? நான் என்ன குழந்தையா? ஐ ஆம் அன் அடல்ட்!' 3 கடற்கரையை ஒட்டிப் புதிதாகப் போடப்பட்டுள்ள உட்புறச் சாலையில் அந்த மோரீஸ் மைனர் காரை நிறுத்தினார் சுந்தரம். அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வேணு முதலில் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான் அவன் பார்லை தூரத்துக் கடலை வெறித்தது...காற்றில் அலைபாய்ந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சற்றுத் தளளி மணலில் போய் நின்று கொண்டான் அவன், அவன் மனசில் கடந்த பத்து நிமிஷமாய்-தன் தந்தையைக் கல்லூரியில் சந்தித்து இங்கு வந்து சேர்ந்தது வரை -எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது?' என்ற குழப்பமதான் குடிகொண்டிருந்தது. என்னதான் தப்பு செய்திருந்தாலும் ஒரு தந்தையிடம் மகன் பேசக்கூடாத முறையில், தான் ஆத்திரத்தில் அறிவை இழந்து விடக் கூடாதே என்ற அச்சம் வேறு எழுந்தது காரிலிருந்து இறங்கிய சுந்தரம தனது கோட்டைக் கழட்டி மடித்து காருக்குள் ஸ்ட்டின் மேல் போட்டுக் கண்ணாடிகளை உயரித்திக் காரின் கதவுகளைப் பூட்டி விட்டு வந்தார். பார்த்து அவன் பக்கத்தில வந்து நின்று கைக்கடிகாரத்தைப் 'மணி ஐந்துதான் ஆகிறது" என்று அவன் காதில் படுகிற மாதிரி தானே சொல்லிக் கொண்டார் சுந்தரம். அதுதான் கூட்டத்தைக்காணோம்" என்று வலிந்த புன்னகை யுடன் அவனும் கூறினான். கடற்கரை மணலில் இன்னும் நிழல் இறங்கவில்லை. அவர்கள் இருவரும் திடீரென மொளனமாகிச் சற்று மணலில் கடலை நோக்கி நடந்தனர். அந்த இருவரையும் பார்க்கும் யாருக்கும் அவர்கள் தந்தையும் மகனும் என்று தோன்றாது. அண்ணனும் தம்பியும் போலவோ, ஆசிரியரும் மாணவனும் போலவோதான் அவர்கள் இருந்தனர். முகச்சாயலில் இருவருக்கும் நிறைய