உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

இதைக் கண்டோர் கண் கலங்கினர்.

இது குறித்துப் பேசினோர், பரிதாபப்பட்டனர்.

தி. மு. க. க்களின் திட்டம் எங்களுக்குப் பிடிக்காது, ஆனால் அவர்கள் மீது சர்க்கார் ஏவிய அடக்கு முறையைக் கண்டிக்கிறோம்.

என்று நம்மோடு நேசமற்ற ஏடுகளும் எழுதின.

இதுகள் என்னைவிட்டுப் பிரிந்துபோய் தனிக் கட்சி வைத்துக்கொண்டன, ஆனால் பாவம், வடநாட்டு எதிர்ப்பு உணர்ச்சியைக் கைவிடவில்லை; நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டும் அளவுக்கு ஆர்வமும் ஆற்றலும் காட்டினர்; மகிழ்கிறேன்; அவர்களைப் போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர்; கண்டிக்கிறேன்.

இதுபோல் பெரியார் கூறும் போக்கிலே இருந்தால், பாசம் பால்போல் பொங்குமல்லவா! இப்படித்தான் பேசுவது முறை என்று தானே பகைவரும் கூறுவர்! கட்சியிலிருந்து, பிரிந்து போனார்கள், ஆனால் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானார்கள், என்று பச்சாதாபம் காட்டத்தானே வேண்டும்.

அந்தச் சம்பவத்தின்போது, ஆனால் போட்டுத்தான் பெரியார் பேசினார், எழுதினார்; எப்படி? நம்மிடம் பச்சாதாபம் காட்டும் முறையில்!

அடக்கு முறையைக் கண்டிக்கக் கடற்கரையில் கூட்டம் கூட நடத்தினார்.

அந்த ‘ஆனால்’ அவருடைய அவசரகாலத் திட்டம் என்பது இப்போது அவர் ஆனால் என்னும் பதத்தை வேறு நோக்குடன் பயன்படுத்துவதலிருந்து தெரிகிறது.

இப்போது பெரியார் பேசுகிறார்,

நான் கொடிகொளுத்து என்றேன்.

சர்க்கார் என்னிடம் நெருங்கவில்லை.

கருப்புக்கொடி பிடித்தோம்; போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது.

ராமர் படம் கொளுத்தினேன்; ஒரு துளி சர்க்கார் அடக்கு முறையும் கிடையாது.

நீ, நேருவுக்குக் கருப்புக் கொடி காட்டினாய் என்ன செய்தார்கள்?