உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாலாக்ஷியின் ஸங்கடங்கள்

௬ ௯

வேலியில் தெப்பக் குளத்தெருவில் பிறந்து வளர்ந்து வந்தவள். திருநெல்வேலியிலிருந்து வேளாண்குடி மிகவும் ஸமீபமாதலால் இவ்விருவரும் அடிக்கடி ஸந்திக்க நேர்ந்தது. சுற்றுப் பக்கங்களிலுள்ள கிராமங்களில் எங்கு எந்த பந்துக்கள் வீட்டில் என்ன விசேஷம் நடந்த போதிலும், அங்கு விசாலாக்ஷியும் வருவாள்; முத்தம்மாளும் வந்துவிடுவாள். வந்தால், இவ்விருவர் மாத்திரம் எப்போதும் இணைபிரிவதே கிடையாது. சாப்பாட்டுக்கு உட்கார்வதென்றால், இருவருமே கூடவே தொடை மேல் தொடை போட்டுக்கொண்டு உட்கார்வார்கள். விளையாட்டிலும் பிரிய மாட்டார்கள். விளையாட்டு முடிந்தால் இருவரும் கைகோத்த வண்ணமாகவே சுற்றித் திரிவார்கள். இராத்திரி, இருவரும் ஒரே பாயில் கட்டிக் கொண்டு படுத்திருப்பார்கள். மேலும், ஒரு ஸமயத்தில் முத்தம்மாளை அவளுடைய தந்தை வேளாண்குடியில் தன் தமக்கை வீட்டிலேயே, அதாவது, விசாலாக்ஷியின் தாய் வீட்டிலேயே, ஆறேழு மாஸம் இருக்கும்படி விட்டிருந்தார். அது எப்போதென்றால், பத்தாம் வயதில் விசாலாக்ஷி தாலி யறுத்த ஸமயத்தில், அப்போது முத்தம்மா வந்து வேளாண்குடியில் சில மாதங்களிருந்தால்தான் தன் மகளுக்கு ஒருவாறு ஆறுதலேற்படுமென்று கருதி விசாலாக்ஷியின் தாய் தன் தம்பிக்கு அவஸரமாகச் சொல்லியனுப்பினான்.

தமக்கையின் வார்த்தையைத் தட்ட மனமில்லாமல், அவர் அங்ஙனமே முத்தம்மாளை வேளாண்குடி