உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாலாக்ஷியின் ஸங்கடங்கள்

௭௫

பருவம் நேர்ந்தால் அப்போதென் செய்வாய்?” என்று மாமா கேட்டார்.

அங்கே நம்முடைய தமிழ்த் தேசத்துப் பிராமணர் அனேகர் குடியேறியிருக்கிறார்கள். இனி மேன்மேலும் அதிகமாகக் குடியேறி வருவார்கள். யாத்திரைக்காக வேறு, வருஷந்தோறும் நம்மவர் அனேகர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அத்தனை ஜனங்களில் என் சந்திரிகைக்கொரு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்?” என்று விசாலாக்ஷி கேட்டாள்.

உடனே அவர் விசாலாக்ஷியின் கையில் ஐந்நூறு ரூபாய் வெள்ளி நாணயங்களாக ஒரு பையில் கட்டிக்கொடுத்து, இதைக் கொண்டுபோய், ரயில் செலவு போக மிஞ்சியதை அங்கு யாரேனும் ஸாஹூகார் கையில் வட்டிக்குக் கொடுத்து வட்டி வாங்கி ஜீவனம் செய்து கொண்டிரு. அடிக்கடி இங்கு வந்து போய்க் கொண்டிரு. உனக்கு அப்போதப்போது என்னாலான உதவிகளைச் செய்துகொண்டு வருகிறேன். பயப்படாதே!” என்று சொல்லி மாமா இவளையனுப்பி விட்டார். ஊராருடைய தூற்றல் பொறுக்க மாட்டாமையால் அவருக்கும் இவளை எப்படியேனும் அந்த ஊரை விட்டனுப்பி விடுவதில் ஸம்மதமாகவே யிருந்தது. அவளுடைய இஷ்டத்துக்கு விரோதமாக அவளை மொட்டை யடித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த அவருக்கு மனம் இல்லை. அவர் அப்படியே கட்டாயப்படுத்தியிருந்தாலும், அவள்தற்குக் கட்டுப் பட்-