உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௭௬

சந்திரிகை

டிருக்க மாட்டாள். அவள் கட்டுப்பட்டு மொட்டையிட்டுக் கொண்டாலும் அதைப் பார்க்க அவருக்கு மனமிருந்திராது. அவருக்கு விசாலாக்ஷியின் மீது அத்தனை தூரம் பிரியம். அவளைத் தன் சொந்த மகள் போலவே கருதினார்.

எனவே, அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு விசாலாக்ஷி புறப்பட்டு வழி நெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பையழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபஹரித்துக் கொள்ளவும். அல்லது அவ்விரண்டு வகைப் பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண்மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த்ரோக்தமாக விவாகம் செய்துகொண்டு அவளுடன் ஸதிபதியாக வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை. எனவே முழுதும் ஆசாபங்கமுற்றவளாய், அதனால் ஒருவித முரட்டுத் தைரியம் அதிகப்பட்டுத்தான் இவள் ஜீ. சுப்பிரமணிய அய்யரிடத்திலும், அப்பால் வீரேசலிங்கம் பந்துலுவிடத்திலும், இத்தனை பெருந் துணிவுடன் தனக்கு வரன் தேடிக் கொடுக்கும்படி வற்புறுத்தக் கூடியவளாயினாள். அப்பால், மேலே கதையை நடத்துவோம்.

இப்போது, அதாவது ௧௯0௫ ஆம் வருஷ ஆரம்பத்தில் கார்காலத்தில் ஏகாதசி யிரவில், மயிலாப்பூர் வக்கீல் ஸோமநாதய்யர் வீட்டில் தரைப்பகுதியில் ஓரறையில் விசாலாக்ஷி சந்திரிகையுடன் படுத்திருந்த கதையை மேலே சொல்லுவோம். அவளுடைய கரிய கூந்தல் அந்த நேர்த்தியான விளக்கொளியில்