உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சந்திரிகையின் கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலை

௮௯

யரசர் சொல்லுகிறார். அந்தக் கரடுமுரடான பாதையிலே ஒருவன் சிறிது தூரம் மனத் தளர்ச்சியில்லாமலும் பாவ நெறியில் நழுவிச் செல்லாமலும் உண்மையுடன் செல்வானாயின் இன்பத்தைச் சுத்த நிலையில் காணலாம். இவ்வுலக இன்பங்கள் சாசுவதமில்லையென்றும் க்ஷணத்திலே தோன்றி மறைவன என்றும் சொல்வோர் சித்தத்தில் உறுதியில்லாதவர்கள். இவ்வுலக இன்பங்கள் எண்ணத் தொலையாதன. இவ்வுலகத்தின் காட்சியே முதலாவது பெரும் பேரின்பம். ஸூரியனும், வெயிலும், பக்ஷிகளும், இனிய தோற்றமுடைய மிருகங்களும், சோலைகளும், மலைகளும், நதிகளும், காடுகளும், அருவிகளும், ஊற்றுக்களும், வானவெளியும், வானமூடியும், சந்திரனும், நிலவும், நக்ஷத்திரங்களும் பார்க்கப் பார்க்கத் தெரிவிட்டாத ஆனந்தந் தருவன. ஏழை மானிடரே! இவையெல்லாம் சாசுவதமல்லவா? க்ஷணந் தோறும் தோன்றி மறையும் இயல்பு கொண்டனவா? தனித்தனி மரங்கள் மறையும். ஆனால் உலகத்தில் காடுகளில்லாமல் போகாது. தனிப் பக்ஷிகளும் மிருகங்களும் மறையும். ஆனால் மிருகக் கூட்டமும் பக்ஷி ஜாதியும் எப்போதும் மறையாது. இவற்றின் நிலைமை இங்ஙனமாக, மலை, கடல், வானம், இடைவெளி, ஸூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் இவை எப்போதும் மாறுவனவல்ல. எப்போதோ யுகாந்தரங்களில் இவையும் மாறக் கூடுமென்று சாஸ்திரிகள் ஊஹத்தாலே சொல்லுகிறார்கள். ஆனால் அந்த ஊஹவாதத்தைப் பற்றி நாம் இப்போது கவனிக்கவேண்டிய அவசியமில்லை. இன்-