உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

‘ரோஷம்’ காட்டினாரா? அவரா!! காட்டியிருந்தால் இன்று கரூரிலும் மதுரையிலும் பிற இடங்களிலும், ‘பிரமுகர்கள்’ தரும் வரவேற்புக் கிடைத்திருக்காதே!

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 400 கோடி தரவேண்டுமென்று, டில்லி சென்று ‘இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி’க் கேட்டார். நேரு பண்டிதரோ, ஆடினார் ஆடி சாடினார் ஓடோட! எனை செய்தார், வேண்டமய்யா இந்தப் பதவி என்று கூறி இராஜிநாமாச் செய்தாரா? செய்வாரா? சுவை சாமான்யமா?

எனவே, திட்டம் தந்தால் இராஜிநாமாச் செய்கிறேன் என்று பேசுவது, உண்மையல்ல; விளையாடுகிறார்!

திட்டம் தீட்ட எனக்குக் தெரியுமா, தெரியாதா, என்பதா, இன்று அரசியல் பிரச்சினை?

இதிலேயும், பார் தம்பி, அடிமைப் புத்தியை.

நம்மைப்போய் நையாண்டி செய்கிறார், அன்னிய மோகம் என்று; இவர் இலட்சணத்தைக் கவனித்தாயா? நான் திட்டம் தீட்டவேண்டுமாம், அதை ஒரு அயல்நாட்டு நிபுணர் ஒப்புக்கொள்ள வேண்டுமாம்!

அயல்நாட்டு நிபுணர்!! ஏன் இந்த அடிமை மனப்பான்மை?

சரி, இனிப் பிரச்சினையைப் பார்த்திடுவோம்.

நான், அயல்நாட்டு நிபுணர் கண்டு மெச்சி ஏற்றுக்கொள்ளத்தக்க திட்டம் ஒன்று என்னிடம் இருக்கிறது, அதை நிறைவேற்ற 2000 கோடி தருக! என்று கேட்கவில்லை.

நான் கேட்டது, நீங்கள் தீட்டியுள்ள இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2000 கோடிரூபாய் தென்னகத்துக்கு ஒதுக்குங்கள், என்றுதான் கேட்டேன்—கேட்கிறேன்—ஒவ்வொரு வாக்காளரிடமும் கூறி இதைக் கேட்கச் சொல்லப் போகிறேன்.

இப்போது, இந்த அமைச்சர் கொலுவிருக்கும் சென்னை ராஜ்யத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 170 கோடி!

இவர் கேட்டது 400 கோடி! கிடைத்தது 170!