பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் –4 - go * ஐந்தினைச் சூழல் குறிஞ்சி முதலான ஐந்தும் ஒத்த காமத் தன்மையால் ஒன்றா யினும், ஒழுக்கவகையால் தனிநிலை குறிப்பதற்காக ஐந்திணை. என்று எண்ணுப் பெயர் பெற்றன என்பதை முன்னர்க் குறிப்பிட் டோம். திணை என்ற சொல்லுக்கே ஒழுக்கம் என்ற பொருள் உண்டு. ஐந்து வகை ஒழுக்கங்களையும் தொல்காப்பியர், புணர்தல் பிரிதல் இருத்தல் இரகங்ல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே." என்று குறிப்பிடுவர். இங்ஙனம் ஒழுக்கங்கள் ஐந்து வகையாகப் பிரித்துப் பேசப்பெறுவதால் இவற்றை ஐந்திணை நெறி என்றும் குறிப்பிடும் வழக்கமும் உண்டு. இந்த ஐந்து ஒழுக்கங்களும் எல்லா நிலத்து மக்களிடமும் நிகழும் பொதுவான நிகழ்ச்சிகளே எனினும், மலைநாட்டில் புணர்தல் நிகழ்வதாகக் கூறுவது இலக்கிய மரபு, இவ்வாறே பாலை நிலத்தில் பிரிதல் நிகழ்வதாகவும், முல்லை நிலத்தில் இருத்தல் நிகழ்வதாகவும், மருதநிலத்தில் ஊடல் நிகழ் வதாகவும், நெய்தல் நிலத்தில் இரங்கல் நிகழ்வதாகவும் இலக்கணம் வகுக்கப்பெற்றுள்ளது. இந்த முறையில் கூறினால் தான் சிறப்பு என்பதை எண்ணியே பண்டைய ஆசிரியர்கள் ஒழுக்கத்தின் பெயர்களையே நிலத்திற்கும் கொடுத்தனர்." அகத்திணை - 16. (இளம்) குறிஞ்சி முதலாய குறியீடுகள் அவ்வந் நிலத்திற்கு உரிய மலர்களின் பெயர்களே என்றும், பின்னர் இப்பொருள்கள் களைப் புலப்படுத்தும் குறியீடுகளாயின என்றும் கருதுவார் ஒரு சாரார். அற்றன்று என மறுத்துக் குறிஞ்சி முதலானவை புணர்தல் முதலாய உரிப் பொருள்களை முதற்கண் தருவன எனவும், பின்னரே மலர்களையும் நிலங்களையும் குறிக்கப் போந்தன எனவும் கருதுவர் மற்றொரு சாரார்.