பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-11 தோழியிற் கூட்டம் அகவொழுக்கத்தின் ஒரு பகுதியாகப் பண்டையோர் குறிப் பிட்ட களவியலில் பெருவரவிற்றாயுள்ளது தோழியிற்கூட்டமாகும். சங்க இலக்கியத்துள் காணப் பெறும் 882 களவுப் பாடல்களில் 40 பாடல்களே முற்கூறிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்ற மூன்று வகைக்கும் உரியன. எஞ்சியுள்ள 842 பாடல்கள் தோழிற் கூட்டம் என்னும் இந்த வகைக்கு மட்டிலும் உரியவையாகும். இப் புலனெறி வழக்கம் இல்லை யாயின் காதலர்களின் களவொழுக்கம் நீளாதாதலின் ஐந்திணை இலக்கிய உலகில் தோழி என்னும் பாத்திரம் மிக இன்றியமை யாதது என்பதை அறிகின்றோம். அகத்திணை நாடகத்தைப் பொறுப்புடன் நடத்தும் பெருவிசை போன்ற இவள் செவிலியின் மகளாகக் கூறப்பெறுகின்றாள். - - தோழி தானே செவிலி மகளே. என்பது தொல் காப்பியம். இவளுடைய உலகியலறிவும், சதுரப் பாடமைந்த இவளது பேச்சும் அகத்துறைபாடல்களின் சுவையை மிகுதிப் படுத்தும் தன்மையன வாக இருக்கும். தோழியிற் கூட்டத்துறைகள் புலவர்களின் நெஞ் சினை மிக்குக் கவர்ந்தனவாதலின் இத்தன்மையனவான பாடல் கள் மிகவும் அதிகமாக எழுந்தனவாகக் கருதலாம். தோழியின் தொடர்புக்குப் பிறகு தலைவனின் காதல் வாழ்க்கையில் நிகழும் செய்திகள் அளவற்றவை. இவையெல்லாம் சங்கப்பாடல்களி லும் கோவைச் செய்யுட்களிலும் கண்டு இன்புறத் தக்கவை: 1. புலனெறி வழக்கம் என்பது, சுவைபட வருவனவெல்லாம் ஒரிடத்து வ்ந்தனவாகத் தொகுத்துக் கூறும் நாடக வழக்கும், உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வரும் உலகியல் வழக்கும் விரவிருவதாகப் பாடப்பெறும் அகப் பொருள் மரபாகும். 2. களவியல்-35 (இளம்)