பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*36 அகத்திணைக் கொள்கைகள் என்பதற்காக முதல் கரு உரிப்பொருள்களின் பிணைப்பை ஆசிரியர் கூறினாரேயன்றி இன்ன இயற்கைச் சூழலில் இன்ன உரிப் பொருளே இயற்கை எனக் கூற முன் வந்திலர் என்பது ஈண்டு அறியத்தக்கது. முதல் கரு உரி என்பதன் பிணைப்பு ஒர் இலட்சியப்படைப்பே' புலனெறி வழக்காக நல்லிசைப் புலவர்களால் மேற்கொள்ளப் பெற்ற ஓர் இலக்கிய நெறியே. இதனை சங்க இலக்கிய அகப் பாடல்கள் அனைத்திலும் கண்டுவிட முடியாது. காரணம், உல கியல் வழக்காகப் பாடப்பெற்ற பாடல்களும் ஆங்குக் காணப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக நெடுந் தொலையிலுள்ள 40 நெய்தற் பாடல்களில் மூன்று பாடல்களே' நெய்தல் உரிப் பொருளைக் கூறுகின்றன. ஏனைய 37 பாடல்களும் களவு நெறி யில் அமைந்து குறிஞ்சி ஒழுக்கத்தைப் பேசுவனவாகும். எனினும், நாற்பது பாடல்களிலும் உள்ள முதற் பொருளும் கருப் பொருளும் நெய்தலுக்கு உரியவையே யாகும். இங்ஙனமே, கலித் தொகை யில் முல்லைத் திணைப்பாடல்களாகவுள்ள 17 பாடல்களில் ஒன்றேனும் முல்லை உரிப்பொருளை துவலவில்லை. ஆயினும், அவண் வரும் முதற்பொருளும் கருப்பொருளும் முல்லைக் குரியன வாகவே அமைந்துள்ளன. முதற்பொருளைச் சிறப்பாக நிலத்தை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் பாகுபடுத்தப்பட்டதன் పోణTaT53ణు கைக்கிளைப் பெருந்தினைப் பாடல்கள் தனித் தனயாகப் பாகுபடுத்தப்பெறாது அவ்வந் நிலத்தை யொட்டியே பாகுபடுத்தப்பெற்றன." இவற்றை எண்ணுங்கால் முதலில் நிலப் பாடல்களை குறிஞ்சிநிலப் பாட்டு, முல்லைநிலப்பாட்டு, மருதநிலப் பாட்டு, நெய்தல் நிலப்பாட்டு என்று தோன்றியிருக்க வேண்டும் என்றும், அங்ஙனம் தோன்றுங்கால் அப்பாடல்களில் காமத்தின் பல கூறுகளும் அமைந்து கிடத்தல் இயல்பே என்றும் இருக்க வேண்டும் என்பதாக நினைக்கத் தோன்றுகின்றது. புலனெறி வழக்காக இன்ன நிலத்தில் இன்ன ஒழுக்கந்தான் நிகழ்தல் சிறப்பு என்று வரையறை செய்யப்பெற்றாலும், உலகியல் வழக்கில் அங்ங்ணம் நிகழ்தல் இயலாததொன்று. உலக வியற்கைக்கும் அது முற்றிலும் மாறானதாகும். ஏனென்றால், 1- அகம் 40, 50, 70. 12. அகத்திணை - 13 (நச்.) இதன் உரையில் நச்சினார்க் கினியர் காட்டும் எடுத்துக்காட்டுகள் இக்க்ருத்தினை விளக்கும்.