பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்டம் 79 ஏதாவது கேட்டால் நாணம் அவளைக் கொன்று விடும். ஆகவே, அப்பெண்டிர் கூறும் செய்தியை மறைத்து வைத்துக் கொள்ளு இன்றேன்' என்று ஒரு தாய் கூறுவதை இதில் காண்க. இதுவும் கபிலர் காட்டும் தலைவியின் நாணச் செவ்வியே. பருவம் நிரம்பிய நங்கையர் தம் காம உணர்வைச் சொல்லாலும் வெளிப்படுத்து வதில்லை; எண்ணத்தாலும் அறிய இடம் தருவதில்லை என்பது ஒர் உளவியல் உண்மை. ஆகவே, அன்னவர் அக மனத்தை அறிவ தற்கு தோழிக்கு எழுவழி அமைத்துக் காட்டுவர் தொல்காப்பியர். நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை' " (நாற்றம் - புணர்ச்சியில் தலைவனிடம் பெற்ற புதிய மணம்; தோற்றம் - புதிய களை ஒழுக்கம்-புதிய ஒழுக்கம்; உண்டி-உண்னும் அளவில் குறைவு செய்வினை மறைப்புசெயலை மறைத்தல்; செலவு - தனியே செல்லல்; பயில்வு ஓரிடத்து இருத்தல்) என்ற அவர் கூறும் விதி காண்க. தலைவியின் நற்குறிப்பு அறிந்த பிறகு தோழி காதலர்கள் மீண்டும் கூட வழி அமைத்துத் தரு வாள். இங்ங்ணம் தோழியின் உதவியால் நிகழும் கூட்டம் தோழியிற் கூட்டம்' என வழங்கப்பெறும். இயற்கைப் புணர்ச்சி முதலான முன்னைய கூட்டங்கள் நிகழ்ந்த இடத்தே நிகழும்: புணர்ச்சிக் களம் மாறுவதில்லை. தோழி கூட்டுவிக்கும் கூட்டங்க களோ பல்வேறு இடங்களில் நிகழும். இன்ன இடம் என்று களம் சுட்டுவது தோழியின் பொறுப்பாகும். இத் தோழியிற் கூட்டம் என்ற பகுதி மிக விரிவுடையது என மேலே கூறினோம். இதுவும் பல சிறு பகுதிகளாக முன்னோரால் மொழியப் பெற்றுள்ளது. இனி அச்சிறு பகுதிகளை ஒவ்வொன்றாகத் தனித்தனியே அடுத்துக் காண்போம். SAASAASAASAASAASAASAASAASAAAS 16. களவியல் - 24 (இளம்)