பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்டம் 77 இனி, தலைவன் தலைவியுடன் தன் களவுத் தொடர்பைத் தோழிக்கு உணர்த்துதல் வேண்டும். இதனை எங்ஙனம் செய்வது? நானொடு பிறந்து நாணிலே வளர்ந்த தலைவி தன் புதிய உறவைத் தோழியிடம் கூறாள். கூறும் பொறுப்பு தலைவனிடமே உள்ளது. தோழியும் ஒரு பெண் தானே தனிமையில் அவளைச் சந்தித்து எங்ஙனம் தன் நிலைமையை எடுத்துரைப்பது? தலைவன் இதனைத் தன் மதிநுட்பத்தால் செயற்படுத்துகின்றான்.தலைவியும் தோழியும் ஒருங்கு சேர்ந்திருக்கும்போது சென்று வெளிப்படை யாகவோ குறிப்பாகவோ தன் களவை மிக நயமாகப் புலப்படுத்து கின்றான். - ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும்; உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல், நல்லோர்கட் டோன்றும் அடக்கமும் உடையன். இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன்: அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னை சொல்லும்சொற் கேட்டி சுடரிழாய்." (எளிவந்து - தாழ்ந்து மதுகை - பலம், வலி; வல்லார் - மெய்ப்பொருள் வல்லார்; புன்கண் - வறுமை; ஆண்தகை - ஆளும் தன்மை; விட்டு - கைவிட்டு) என்று கபிலர் இச்செயலை மிக அருமையாகப் புலப்படுத்துவர். தோழி தலைவிக்கு உரைப்பதுபோல் இதனை அமைத்துக் காட்டுவர். எளிமை பெருமிதம், அறிவு அடக்கம், அருள் ஆற்றல் உடைய நம்பி ஒருவன் எவ்வன்மையும் இல்லாத என்னிடம் போந்தான். நின்னையின்றி என் வாழ்க்கை இல்லை, என்றான்; ஒரு நங்கை பொருட்டுத் தன் ஆண் தகுதிகளை யெல்லாம் கைவிட்டான். இவன் சொல் நம்பத் தக்கதோ? தனி ஒரு பெண்ணால் ஆராய்ந்து உண்மை காணும் தகுதி உடைய தோ?’ எனத் தலைவனின் தோற்றத்திலும் பண்பிலும் தோழி ஈடுபட்டு அவன் குறையைத் தீர்த்து வைக்கவும் எண்ணுகின்றான். எனினும், தலைவியிடம் இதனை எங்ங்ணம் உரைப்பது? முதலில் அவளை எப்படி இதற்காக அணுகுவது? தன் களவு 10. கலி - 41