பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவு பற்றிய விளக்கம் 47 நலனும், ஒத்த செல்வமும், ஒத்த கல்வியும் உடையராய்ப் பிறிதொன்றிற்கும் ஊனமின்றிப் போகம் துய்ப்பர். அப்போது, அவர்களிடம் இதை விடப் பேரின்பம் என்பதொன்றுண்டு என்று கூறினால், அதனை எங்ஙனம் பெறுவது?’ என்று வினவுவர். அப்போது அதனைத் தவத்தால் பெறலாம் என்பதாகக் கூறல் வேண்டும். உடனே, அவர்கள் தாமும் தவம் செய்து பெற வேண்டும் என்று தவத்தில் ஈடுபடுவர். அப்போது வீடு பேற்றின் பெருமையை விரிந்துரைத்தல் வேண்டும். அப்பேறு பிறப்பு, பிணி மூப்பு, சாக்காடு அவலக் கவலை முதலியவையின்றி உள்ளது என்று கேட்டுத் தவமும் ஞானமும் புரிந்து, அதனைப் பெறுவர். இவ்வாறு அவர்களை வஞ்சித்துக் கொண்டு சென்று நன்னெறிக் கண் செலுத்துவதால் இம் முயற்சிக்குக் களவு என்று பெயரிடப் பட்டது. களவியல் கற்க அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் பெறலாம் என்பது இறையனார் களவியலுரை யாசிரியரின் கருத்தாகும். தமிழ் வழக்காகிய இக்களவு என்னும் கைகோள் நான்கு வகை யாக நடக்கும் என்று இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். தொல் காப்பியர், காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வுமென்று ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு, மறையென மொழிதல் மறையோர் ஆறே.”* (பாங்கொடு தழாஅல்-பாங்கற் கூட்டம்; தோழியிற் புணர்வு-தோழியிற் கூட்டம்: மறை-களவு.) - என்று இதற்கு விதி வகுத்துக் காட்டுவர். காமப் புணர்ச்சி, இடந் தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்ற நான்கும் காதல் ஒழுக்கத்தில் வரும் நான்கு கட்டங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் பல நிகழ்ச்சிகள் உண்டு. தனித்தனி நிகழ்ச்சியைத் துறையென்று குறிப்பர் இலக்கண நூலார். இந்த நான்கு கட்டங் களையும் அடுத்துக் காண்போம். களவுத் திணையை மட்டிலும் பாடிய புலவர்கள் 145 பேர் களவுத்தினைப் பாடல்கள் 882. இவற்றுள், 41 களவுப் பாடல் கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்தப் பாடல்களில் பாடிய புலவோர்தம் அறிவுக் கொழுமுனைக்குத் தக்கவாறு சொல் நயம் பொருள் நயம் கொழிக்கும் பல புனைவுகளைக் கண்டு மகிழ ه للسF i ثانية 23. செய்யுளி. 178.