பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-9 இடத்தலைப்பாடு ‘பாலதாணையால் தற்செயலாகச் சந்தித்த இருவர் அடுத்தடுத்துச் சந்திக்க விழைகின்றனர். முதல் நாள் சந்தித்த அதே இடத்தில் மறு நாளும் இருவரும் எதிர்ப்படுதலையே இடந்தலைப்பாடு என இலக்கண நூலார் குறியீடு செய்வர். தலைப்பாடு-தலைப்படுதல்-கூடுதல். இஃது இரண்டொரு நாள் கழித்து நடைபெறினும் மறுநாளே நடப்பதாகக் கூறுதல் புலனெறி வழக்கமாகும். தலைவனும் தலைவியும் வினையினால் தலைப்படுதலால் இப்பெயர் பெற்றது. இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து இருவரும் பிரிந்த பின்னர், அப்பிரிவாற்றாது வருந்தி நின்ற தலைமகன் தலைவியை மறு நாளும் கூட எண்ணி யான் நெருநல் இவளை எய்தியது விதியானே; இன்றும் அவ்விதி கைதருமேல் காண்பல்” என்று தன் தோழனுக்குக் கூறாது முன்னை நாளில் அவளைக் கண்ணுற்ற பொழியில் புகுவான். தலைவியும் பிற்றை ஞான்று இங்ஙனமே தன் ஆய வெள்ளத்தோடும் வந்து, தான் நெருநல் விளையாடின இடத்தைக் குறுகி 'நேற்று நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன் என்று சொல்லிச் சென்றவன் அறியாது இவ்வாயத்துள்ளே வருவான் கொல்லோ?” என்னும் பெரு நாணினாலும், நம் பிரிவு ஆற்றாமையால் இறந்து பட்டான் கொல்லோ?’ என்ற அச்சத்தினாலும் மீது.ாரப்பட்டுத் தன் தன்மையளன்றி நிற்பாள். ஆயங்களும் முன்னை நாளில் பிரிந்தாற் போன்று தழைவிழை தக்கன தொடுத்தும் என்றும், கண்ணி தண்ணறு நாற்றத்தன செய்தும் என்றும், போது மேதக்கன கொய்தும் என்றும், இவ்வாறு விளையாட்டு விருப்பினால் பிரியும். இந்நிலையில் தலைமகன், தலைமகள் தனிமையாக நிற்கும் இடத்தை நோக்கிச் சென்று தலைமகளை எதிர்ப்படுவான். தலைவியும், "இவன் நம்பால் அன்பிலனோ: