பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-12 தேம் ழியிற் கூட்ட மரபுகள் (i). பாங்கி மதியுடன்பாடு - தோழியின்மூலம் தன் குறையை முற்றுவித்துக் கொள்ளலாம் எனக் கருதும் தலைவன் அவளை மதியுடம்படுத்தபின் னல்லது தன் குறையை முடிக்க வேண்டும் என்று அவளுக்குத் தன் கருத்தைக் கூறான். மதி என்பது, அறிவு, உடம்பாடு என்பது, உடம்படச் செய்தல், அஃதாவது தன் கருத்துக்கு ஒப்ப அவளை ஒழுகச் செய்தல். மதியுடம் படுதலை இளம்பூரணர் புணர்ச்சி யுணர்தல்' என்று கூறுவர். தலைவன் தோழியிடம் தன் குறை யைத் தெளிவாகக் கூறாது கரந்த மொழியால் கூறுவானாத லாலும், அங்ஙனம் களவொழுக்கத்தால் தலைவியிடம் தோன்றும் வேறுபாட்டின் காரணமும் புலப்படாததாலும் அந்த இரண் டையும்-இருவர் கருத்தினையும்-தன் மதியுடன. ஒன்று படுத்தி உணர்வாள். இவ்வாறு தலைவன் மதி, தலைவி மதி, தோழி மதி என மூவர் மதியினையும் ஒற்றுமைப்படுத்தி உணர்தல்பற்றி இது மதியுடம்படுத்தலாயிற்று என்று உரைப்பர் நச்சினார்க்கினியர்,” இங்ஙனம் தோழியைத் தலைவன் மதியுடம் படுத்துதலுக்கு ஏற்ற நேரத்தையும் அக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தோழியை மதியுடம் படுத்தற்கு எண்ணிய தலைமகன் அவள்பாற் செல்லுதல் பாங்கியிடைச் சேறல் என்னும் துறையாகவும், தான் சென்றபோது தன் தலைவியும் அத்தோழியும் மட்டும் தனித் தொருங்கு ஒரிடத்து இருந்தமையின் இதுவே தன் குறையெடுத்துக் கூறுவதற்கு ஏற்ற நேரம் என்றும் எண்ணித் தன் குறை கூறத் துணிதல் குறையுறத் துணிதல்’ என்னும் துறையாகவும் திருக் கோவையாருள் கூறப்பெறுகின்றன. தலைவியும் தோழியும் 1. களவியல்-37 (உரை), 2. டிெ-36 (நச்-உரை).