பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்டம் - - 75 உளவியல் நுட்பங்களையெல்லாம் ஆண்டுக் கண்டு மகிழலாம். அகத்தினை நாடகத்தில் இவளுடைய பங்கினை இந்நூலின் வேறோர் இடத்தில் இயல்-22 சற்று விரிவாகக் காணலாம்." காதலியைத் தற்செயலாகக் காணும் இடந்தலைப்பாடும் பாங்கன் துணையால் ஏற்படும் சந்திப்பும் அடிக்கடி நிகழக்கூடி யவை அல்ல. நினைத்தவிடமெல்லாம் விரும்பியவாறெல்லாம் சுற்றித் திரியும் போக்குரிமை ஆடவரைப் போன்று குமரியர்க்கு இல்லை. தாய் தந்தையரின் கடுங்காப்பு இல்லக் குமரியர்க்கு என்றும் உண்டு. - யாயே கண்ணினும் கடுங்கா தலளே எந்தையும் நிலனுறப் பொறாஅன்' என்று கூறும் அகநானூற்றுத் தலைவியின் வாக்காலும், யானும் ஒர், அம்மனைக் காவலுளேன்' என்ற முத்தொள்ளாயிர நங்கை யின் கூற்றாலும் இதனை அறியலாம். ஒருகால் பெற்றோர் இசைவு பெற்று வெளியிற்சென்றாலும் தோழியும் உடன்செல்வாள். யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஒருயிர் அம்மே." என்ற கபிலரின் பாடலால் இந்த இணை பிரியாக் கேண்மையை நன்கு அறியலாம். இன்றும் கன்னி மாடத்திலும், கல்லூரியைச் சார்ந்த மகளிர் விடுதிகளிலும் இளங்குமரியர் இருவர் அல்லது மூவராகச் செல்லும் , ரபு வழக்கிலுண்மையைக் காணலாம் ஆகவே, தலைவியினுடைய ஆருயிர்த் தோழியின் உதவியின்றித் தலைவியைச் சந்திக்க முடியாது என்று கருதுகின்றான் தலைவன். இதனை, புணர்ந்த பின்றை ஆங்ங்ணம் ஒழுகாது பணிந்த மொழியால் தோழி தேஎத்து இரந்துகுறை யுறுதலும் கிழவோன் மேற்றே" 3. இயல்-22. 4. அகம்-12 5. முத்தொள்ளாயிரவிளக்கம்-44, 6. அகம் - 12 7. இறை. கள. - 5