பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அகத்திணைக் கொள்கைகள் சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள் காய்சின வேந்தன் பாசறை நீடி நம்நோயறியா அறணி லாளர் இந்நிலை களைய வருகுவர் கொல்லென ஆனால் தெறிதரும் வாடையொடு நோனேன் தோழியென் தனிமை யானே' |சிதர் - வண்டுகள்: அற்சிர அரை நாள் - முன் பனிக்காலத்து நள்ளிரவில்; காய் சினம் - சினம் மிக்க: நீடி - நெடிது மேவி: நோய் - துன்பம், களைய நீக்க; ஆனாது - அமையாது; எறி தரும் வீசும்; நோனேன் - பொறேன்.) இது பருவ வரவின்கண், வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது. இதில் முல்லையுள் முன்பணி வந்தது. நிலமும் கருவும் மயங்கிற்று. இவற்றை அடக்கியது போல், - உரிப்பொருள் அல்லன. மயங்கவும் பெறுமே.” என்றுவிதியும் அமைத்துக் காட்டுவர் தொல்காப்பியர். அஃதாவது, ஐந்து திணைகளும் தம் முதல், கருப்பொருளில் மயங்கி வரலாம் ವ್ಲಾಹ கொள்ள வேண்டியவர்களாகின்றோம். ஆயின், உரிப் பொருளைப் பாடற் பொருளாகப் விளக்கும்போது இரண்டுதிணை களுக்குரிய உரிப் பொருள்கள் கலந்து ஒருபாட்டில் வரமுடியாது. எனவே, இரண்டு உரிப்பொருள்கள் தம்முள் மயங்கி வரும் என்றல் பொருந்தாது. ஆயின், முதலும் கருவும் ஒரு திணைக்குரியன வாகவும் உரிப்பொருள் பிறிதொரு திணைக்குரியதாகவும் -3յ6Ճիւն Այնմուն. - இங்ங்ணம் விளக்குங்கால் ஒரு திணைக்கு நிலமே மாறுதல் இல்லாத முதன்மையான கூறு ஆகின்றது. இதனாலேயே நிலம் முதற்பொருளாகக் கொள்ளப்பட்டது என்பது அறியப்படும். காலத்தை விடவும் நிலத்திற்கு முதன்மையும் தரப்பெற்றது. அகப் பாடல் ஒன்று இன்ன திணையைச் சார்ந்தது என்று வரையறை செங்வதற்கும் திணை மயக்கம் பற்றித் தொல் காப்பியர் கூறும் கருத்துகள் நமக்குப் பெருந்துணையாக உள்ளன. அகப்பாடல் ஒன்று முதல் கரு உரிப் பொருள்கள் 6. அகம், 294 அகத்திணை - 13 (நச்.)