பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 அகத்தினைக் கொள்கைகள் பெருங் காமத்தை உரைத்துத் திரியும் தலைவியின் நாணில் செய லையும் பொருளாகக் கொண்டு பெருந்திணை பாடினார் அந்து வனார். தன்மேல் விருப்பம் இல்லாக் குமரியை நச்சி ஒருவன் மடலூர்வது இல்லை. விருப்பம் ஒத்த நல்லாளை மணப்பதற்கே ஊரறியமடல் ஏறுகின்றான் ஆதலின், அன்பின் அகத்திணையாம் என அறிக. கணவன் அல்லாத ஒருவன்மேல் கொண்ட காமக் கனிவால் ஒர் இல்லாள் புறம் போந்து புலம்புவது இல்லை. மணந்த ஆடவனது பிரிவு பொறாது வளர்ந்த மெய்ச் சுரத்தால் ஊரறியக் காமப்பறை சாற்றுகின்றான் ஆதலின் அன்பின் அகமே யாம். முன்னது களவிற் பெருந்திணை: பின்னது கற்பிற் பெருந் திணை. நாணில் காமத்தால் பெருந்திணை யாயிற்று எனவும், அன்பு ஒத்த காதலால் அகத்திணை யாயிற்று எனவும் தெளிக. எனவே, அன்பும் நாணமும் ஐந்திணையாம் என்றும், அன்பும் நாணமின்மையும் பெருந்திணையாம் எனவும் வேறு படுத்தி உணர்க. ஐந்திணைக் காதலர் போலப் பெருந்திணைக் காதலர் களும் அன்புடையர், கற்புடையவர். ஐந்திணைக்கு இல்லாத பெருந்திணைக்கே உரிய இலக்கணம் நாணமின்மை. எனினும்,நீங்கிய நாணத்தை மீளப் பெற்றுப் பெருந்திணையர் ஐந்திணையராக நல்வாழ்வு வாழலாம். சமுதாயப் பழி யாதும் இல்லை. இவ் வுண்மைகளையெல்லாம் அந்துவனாரின் பத்துப் பாடல்கள் (கலி 138-147) என்ற விளங்கக் காட்டுகின்றன' என்ற டாக்டர் வ. சுப.மாணிக்கனாரின் விளக்கம் கொண்டு பெருந்திணையை இனங்கண்டு தெளிக. மணமாகிய ஒர் ஐந்திணைத் தலைவியின் ஆராக் காமவுணர் வையே பொருளாகக் கொண்டு கவிதைகள் தொடுப்பர் பெருந் திணைப் புலவர்கள். பெருந்திணைத் தலைவி கழிகாமம் மிக்க கழி படர் பேச்சினள். ஞாயிறு, திங்கள், கடல், காற்று எல்லாம் அவளுக்கு முன்னிலைப் பொருள்களாகின்றன. காமம் காழ்க் கொண்டவளாதலின் அவள் பேச்சுகள் முன்பின் மலைவா கின்றன. அறிவுக்குப் புறமாய் அவளின் காமவேக்காட்டிற்கு ஒத்தனவாகின்றன. கதிரவனை நோக்கிப் பேசும் பேச்சில் காதல் மயக்கத்தில் உளறும் கழிபடர் கிளவிகளைக் கேட்கலாம்(கலி-142). தன் கணவனைத் திங்களுள் இருக்கும் முயல் காட்டாவிடில் அதனைக் கவ்வ வேட்டை நாயை ஏவுவதாகவும் வேட்டுவருள்ள இடத்துச் சென்று ஒரு முயல் இருப்பதாகக் கூறுவதாகவும், 70. தமிழ்க் காதல் (இரண்டாம் பதிப்பு) பக். (443-44).