பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 அகத்திணைக் கொள்கைகள் பெயர்கள் வராமல் நம்பி, நங்கை என்ற பெயர்களே இங்குத் காணப்பெறும். இன்பமும் துன்பமும் கலந்த களவியல் வாழ்க் கையில் பல்வேறுபட்ட நிலைகளில் வாழும் காதல் மாந்தர்களிட . மிருந்து காதல் கூறுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களிடம் இருப்பதாகப் படைத்துக் காட்டுவதே அகத்திணை இயல்பாகும். பெயரில்லாத இவர்கள் மக்களின் காதல் மனங்களைத்தாம் நமக்குக் காட்டுகின்றனர். மகக்ள் நுதலிய அகன் என்று கூறிய தொல்காப்பியரும் சமுதாயத் தோற்றத்தையும் அதன் நோக்கத்தையுமே நமக்குக் காட்டினர் என்று கொள்ளலே பொருத்தமுடையதாகும். ஆசிரியர் தொல்காப்பியரும் தம்முடைய அகப்பொருள் நுதலும் நூற்பாக் களில் கிழவோன் மேன', 'தோழிக்கு உரிய', 'கிழவோள் செப்பல் என்று உறவுக் குறியீடு செய்திருத்தலாலும் இம்முறை மேலும் தெளிவு பெறும். இன்னொரு கருத்தும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. தலைவன், தலைவி, செவிலி, பாங்கன், காமக் கிழத்தி என்ற பெயர்களால் கூற்றுகள் வருதலின் செல்வச் சமுதாயத்திற்கே அகத்திணைக் காதல் வகுக்கப்பெற்றது போலும் என நினைக்கத் தோன்றும். சங்க இலக்கியத்தில் வரும் சில அகத்திணையாளர்களை நோக்கின் இந்நினைப்பு தவறெனத் தெளியலாகும். முல்லைப் பாட்டிற்கும் நெடுநல் வாடைக்கும் மன்னர் குலத்தினர் தலைமக்களாவர். போர்க்களத்திற்குச் சென்ற மன்னர்களை நினைந்து அவர் தம் மனைவிமார் பிரிவுத் துயரால் வருந்துவர். நீளுய்ர் கூடல் நகரில் நெடுங் கொடி எழ, மீளி வேல் தானையர் புகுதந்தார்’ என்று மன்னனது வரவைப் பாலைக் கலி பாங்குற மொழிகின்றது. முல்லை ஐ ங் கு று நூ ற் றி ல் படைத் தலைவர்களையும் போர் மறவர்களையும் காதலர்களாகப் பேயனார் அமைத்துக் காட்டுவதைக் காண்கின்றோம் பெருஞ்சின வேந்தன் போர்த் தொழில் தணிந்தாலன்றோ தன் துணைவி விருந்து பெறுவாள் என்று ஒரு பாசறை மறவன் வருந்துவதைக் காட்டுகின்றார்." அரச கருமத் தொழிலாளி ஒருவன் ஒரு குறுந்தொகைப் பாடலின் தலைமகனாக அமைகின்றான்." குறவர் குறத்தியர், இடையர் 3. களி.31 - - х 4 ஐங்குறு-427, 428, 429, 432, 442, 446, 448, 451, 459, 460, 461, 482, 500. - - 5. டிெ-442. 6. குறுந்-242