பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடந்தலைப்பாடு * $9 பாங்கிலன் தமியோள் இடந்தலைப் படலுமென்று ஆங்க இரண்டே தலைப்பெயல் மரபே." (ஆங்ஙனம்புணர்ந்த கிழவோன்-இயற்கைப் புணர்ச்சியின் பின் பிரிந்த தலைமகன்; பாங்கனோற் குறிதலைப் பெய்தல்-பாங்கனால் குறியிடத்துத் தலைப்பெய்தல்: பாங்கிலன் தமியோள்-பாங்கனையின்றித் தனிய வளாக இடந்தலைப் படல்-இடத்து எதிர்ப்படல் என்பது அவர் கூறும் விதி. இதன் உரையாசிரியர், 'பாங்கற் கூட்டம் நிகழில் இடத்தலைப்பாடு நிகழாது. இடந்தலைப்பாடு நிகழின் பாங்கற் கூட்டம் நிகழாது; என்னை? அத்துணையாகத் தலைவி எளியள் அல்லள் ஆகலான்' என்று கூறுவர். மேலும், அவர் இந்நூற்பாவிற்குத் தடைவிடைகளான் விளக்கும் முறை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. மேற்கூறிய உரைப்பகுதியைத் தொடர்ந்து அவர் கூறுவது: 'அஃதேயெனின். 'பாங்கிலன் தமியோள் இடந்தலைப் படலும் பாங்கனோரிற் குறி தலைப் பெய்தலும் என்று எழற்பாற்று இச்சூத்திரம்; என்னை? இடந்தலைப்பாடு தெய்வப் புணர்ச்சியோடு ஒக்கும் ஆகலான். அஃதே, அங்ஙனம் சொன்னானே எனினும் மொழிமாற்றிக் கொள்க என்பது; அது பொருந்தாது. மொழி மாற்றுதல் என்பது, செய்யுள் கிடந்தவாறு செய்யலாகாத வழிச் செய்வது. அவ்வாறு செய்யும் சூத்திரம் இனியதாய்க் கிடப்ப மொழிமாற்றுச் சூத்திர மாகச் செய்தல் வேண்டுமோ என்றாற்குப் பெரும்பான்மையும் டாங்கனான் ஆம் என்று சிந்திக்கும்; சிறுபான்மை விதியினான். ஆகும் என்று சிந்திக்கும். ஆகலான், அவன் சிந்தித்த வாற்றானே சூத்திரம் செய்யப்பட்டது; மொழிமாற்றுச் சூத்திரம் அன்று என்பது. உலகத்தோர் இடுக்கண் உற்றால் விதியானே தீரும் என்று இரார். முன்னம் தீர்த்தற்குச் சுற்றத்தாரையும் நட்டாரையும் நினைப்பர். ஆகலானும் அவ்வாறே சொல்லப்பட்டது. அதே யெனின், புறத்து யாரானும் உணர்ந்தார் உளர் என்பது உணர்ந்த ஞான்று இவள் இறந்து படும் என்னும் கருத்துடையான், பிற்றை ஞான்றே சென்று பாங்கற்கு உணர்த்தற் பாலனோ எனின், குற்றம் குணம் என்பது தெருளாது உணர்த்தும் என்னும் ஒருவன். அது பொருந்தாது; அங்ஙனம் தெருளாது உணர்த்தின் பாங்கற்கே உணர்த்தக் கடவனோ வழிப்போவார்க்கு உணர்த்த அமையாதோ என்பது. மற்றென்னோ எனின், தான் உணர்ந்தானன்றே இல் 6, இறை. கள-3,