பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவு பற்றிய விளக்கம் S3 முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅ அந்நிலை யறிதல் மெலிவுவிளக் குறுத்தல் தன்னிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று இன்னவை நிகழும் என்மனார் புலவர்." - என்று தொகுத்துக் கூறுவர். இவற்றுள் முன்னிலையாக்கல் என்பது, முன்னிலையாகாத வண்டு நெஞ்சு முதலியவற்றை முள்னிலையாக்கிக் கோடல். சொல்வழிப்படுத்தலாவது, தான். சொல்லுகின்ற சொல்லின்வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல். நன்னயம் உரைத்தலாவது, மேற்கூறிய வண்டு முதலியன சொல்லுவனவாக அவற்றிற்குத் தன் கழிபெருங்காதல் கூறு வானாய்த்தன்னயப்பு உண்ர்த்துதல். நகைநனி உறாஅது அந்நிலை அறிதலாவது, தலைமகன் தன் நன்னயம் உரைத்தலைக் கேட் தலைவிக்கு இயல்பாக அகத்து உளவாகும் மகிழ்வால் புறந் தோன்றும் முறுவற் குறிப்பு மிகத் தோன்றா; அந்நிலையினைத் தலைவன் அறிதல். மெலிவு விளக்குறுத்தலாவது தலைவன் அகத் துறும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக் கூறுதல். தன்னிலையுரைத்தலாவது, தன் உள்ளத்து வேட்கை - மீதுTர்தலை நிலைப்படச் சொல்லுதல். தெளிவு அகப்படுத்த லாவது, தலைமகள் உள்ளப் பண்பினைத் தான் அறிந்த தெளிவி னைத் தன் மனத்தகத்தே தேர்ந்து வெளிப்படுத்தல். இவை ஏழும் இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர் நிகழும் உரையாடல் வகைகளாம் என்பது ஆசிரியர் கருத்து. இவற்றிற்கு உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள் பாடல்கள் இவற்றைத் தெளிவாக விளக்கும். இதற்குமேல் இயற்கைப் புணர்ச்சியாகிய மெய்யுறு புணர்ச்சி நிகழத் தொடங்குவதற்கு முன்னும் சில நிகழ்ச்சிகள் நிகழும். அவற்றை ஆசிரியர், - - மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல் இடம் பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல் நீடுநினைந் திரங்கல் கூறுத லுறுதல்." என்று தொகுத்துக் கூறுவர். மெய்தொட்டுப் பயிறலாவது, தலைவியின் மெய்யைத் தீண்டிப் பழகுதல். நச்சினார்க்கினியர் புலையன் தீம்பால் போல் மனம் கொள்ளுதலும் கொள்ளாமையு மாகித் தலைவி நிற்கின்ற காலத்தே தொட்டான் என்பர். மெய் 10. டிெ - 10. 11. டிெ - 11