பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஐந்தினை-கள வியல் அகத்திணை யொழுக்கத்தில் மிகவும் விறுவிறுப் புடையது களவியல் பகுதியாகும். இக்கள வொழுக்கக் காலம் இரண்டு திங்கள்தான் நடைபெறும் என்பது அகத்திணை மரபு. களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம் திங்கள் இரண்டின் அகமென மெழிாப." என்று இந்த வரையறையை எடுத்துக் காட்டும் இறையனார் களவியல். அதற்குமேல் மகப்பேறு உண்டாகி விட்டால் குழப்பம்'ஏற்படும் என்று இவ்வரை யறை செய்தனர் போலும், இக்களவு முறை இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்று நான்கு வழியில் நடைபெறு வதாகக் குறிப்பிடுவது தொல்லாசிரியர் கூறும் மரபு. இவை இப்பகுதியில் ஆராயப்பெறுகின்றன. இங்ஙனம் நடைபெறுவதாகக் கவிதைகள் யாப்பது அகவிலக்கிய மரபு. இவற்றுள் தோழியிற் கூட்டம் மிக விரிந்த நிலையில் நடைபெறுவது. இதில் பல்வேறு நிலைகள்கட்டங்கள்-உண்டு. இந்தக் கட்டங்களில் முக்கிய மானவை பாங்கி மதியுடன்பாடு, பகற்குறி, இரவுக்குறி, அலர், மடலேறுதல், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, வரைவு கடாதல், அறத்தொடு நிற்றல், ஒருவழித் தணத்தல், உடன் போக்கு என்பவையாகும். இவை சற்று விரிவாக ஆராயப்பெறுகின்றன. இறுதியாக, களவு ஒழுக்கத்தில் இன்றியமையாதனவாகக் கொள்ளப் பெறும் சில மரபுகள் பட்டியலிட்டுக் காட்டப்பெறு கின்றன. இப்பகுதியில். இப்பகுதியில் ஏழு இயல்கள் அடங்கியுள்ளன. 1. இறை. கள நூற். 32