பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர். செல்சுடர் நெடுங்கொடி போலப் பல்பூங் கோங்கம் அணிந்த காடே." (கண்டிசின் - காண்பாயாக, அறுமீன் - கார்த்திகை நாள்: நெடுங்கொடி நீண்ட விளக்கு வரிசை அணிந்த - அழகு செய்யப்பெற்ற) என்ற பாடற் பகுதி காண்க. நாம் இப்போது சென்று கொண் டிருக்கும் காடு உந்தையது. கார்த்திகை விளக்கு வரிசை போல மலர்ந்திருக்கும் கோங்கம் பூக்களைக் காண்பாயாக’ என்று நயவுரை மொழிகின்றான் காதலன். இத்தகைய ஒரு காட்சியை அகப்பாடலும் சித்திரிக்கின்றது. கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின் பிடிமிடை களிற்றில் தோன்றும் குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே." (தொடிசிதை மருப்பு - பூண் சிதைந்த கோடு; களிற்றில் - களிறுகளைப் போல; துணைய அளவினையுடைய: குன்றம் - குன்றுகள்) இப்பாடலின் முற்பகுதியில் கோங்க மலர்களுடன் புனலிப் பூ சேர்ந்து கிடப்பதையும் பாதிரியினின்றும் உதிர்ந்த பூக்கள் வெண் கடப்பமலர்களுடன் கலந்து கிடப்பதையும் சுட்டிக் காட்டி இவை பரவுக் கடன் பூண்ட தெய்வமுடைய திருக்கோயிலின்கண் கலந்து கிடக்கும் மலர்களை ஒத்துள்ளன என்று கூறுகின்றான் தலைவன். இந்த இரண்டு காட்சிகளிலும் தாம் செல்லும் காடு தலைவியின் தந்தைக்குரிய காடு என்று குறிப்பிடப்பெறுவதை உன்னுக. தலைவிக்குக் குடும்பப் பிரிவுச் சோர்வு தோன்றாமை பொருட்டே இங்ஙனம் கூறுகின்றான் என்பதை அறிக. விரத்தினும் காதல் சிறந்தது போலப் பொருளினும் காதல் பெரிது என்று காட்டுவர் இக் கவிஞர். இவர் பாடிய பெரும் பான்மையான கலிப் பாடல்களில் பொருளுக்கும் இளமைக்கும் உரிய போராட்டத்தைக் கணவன் மனைவிக்கிடையே வைத்துப் பலவாறு புனைந்து காட்டுவர். தலைவனின் நோக்கம் பொருள் குவித்தல் அன்று. கடமைகளைத் திறம்பட ஆற்றுவதற்கே பொருளை நாடுகின்றான். முன்னோர் வைத்த தாயப் 78. நற். 202. 79. அகம்-99