பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.26 அகத்திணைக் கொள்கைகள் விடுவழி விடுவழிச் சென்றாங்கவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே' திருவள்ளுவர் படைத்த தலைவி தன் நிலையை, புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு' (புல்லி - தழுவி, புடைபெயர்தல் - விலகுதல்) . என்று கூறுவதும் இவ்விடத்தில் நினைக்கத் தக்கது. இவற்றால் தலைவன்பால் கொண்ட தலைவியின் அன்பு பெறப்படும். பெருந் தேன் இழைக்கும் நாடனொடு நட்பு, நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே' [ஆர் அளவு - அருமை அளவு - அளத்தற்கரிய அளவு) என்று தலைவியொருத்தி கூறுவதையும் காண்க. காதலர்தம் மனவொற்றுமையே அகத்திணையின் உயிர்ப் பண்பு என்பதனை நாம் அறிவோம். இவ்வொற்றுமையே உள்ளப்புணர்ச்சி என்று குறியீடு செய்யப்பெற்றது என்பதும் நமக்குத் தெரியும். புறநடை இல்லாத இறைமை சான்ற இவ்வுணர்ச்சி அகத்திணை ஒழுக்கத்தில் ஊடுருவிச் செல்வதை யாங்கனும் காணலாம். தலைவியொருத்தி தலைவன்பால் தான் கொண்டுள்ள அன்பினைப் பிரிவரிதாகிய தண்டாக் காமம்' என்று புலப்படுத்துகின்றாள். இன்னொருத்தி தலைவன் பிரியின் தன் உயிர் போம் என்கின்றாள். இதனை, 'விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம் இன்னுயிர் அல்லது பிறிதொன்(று) எவனோ தோழி நாம்இழப் பதுவே.* (நீப்பின் பிரிந்தால், எவன் - யாது) என்ற பாடற் பகுதியினால் அறியலாம். இத்தகைய, இலக்கியத் தலைவியரின் குணங்களையெல்லாம் ஆய்ந்து கண்ட தொல்காப்பியர், - 45. நெய்தல் கலி - 13 46. குறள் - 1187 47. குறுந் 3 48. டிெ. 57 49. டிெ, 334