பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கொள்கைகள் 96 என்ற பாடலில் தோழியும் தலைவியும் அல்ல.குறிப் பட்டதை அறிக. தலைவியும் தோழியும் அல்ல.குறிப் பட்டுப் பெயர்ந்தபின் தலைவன் வழக்கம்போல் வந்து தலைவியைக் காணாது சிறைப் புறத்து மயங்கி நின்றானாக, அதனையறிந்த தோழி தலைவ னுக்குக் கேட்கும்படியாக இல்லின் பக்கலிலிருந்து கூறியது இப் பாடல். இவ்வாறு அல்ல.குறிப் பட்ட மறுநாட் காலையில் தலைவி யும் தோழியும் குறியிடம் வந்து நோக்க, தலைவன் குறித்த யிடத்தே தான் வத்து சென்றதற்கு அடையாளமாகக் கோட் டினும், கொடியினும் இட்டு வைத்த மோதிரம், மாலை, முத்தம் முதலியவற்றைக் கண்டு மயங்கி அவர் வருந்துவர். தலைவனும் அவரிட்ட குறி பிழைத்தமைக்கு இரங்கிச் செல்வன். இங்ஙனம் இரவுக் குறியில் பலகாலும் தலைவன் வருங்கால் வேறு சில இடை யூறுகளாலும் தலைவி குறியிடம் சேர்தற்கியலாது போவதுண்டு. தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல், கூகைகுமுறல், கோழி குரற் காட்டல் போல்வன இவ்விடையூறுகளாகும். இவற்றை 'இசவுக் குறி இடையிடு என்று அகத்திணை நூல்கள் ஒரு துறையாகவும் பிரித்துப் பேசும். தொல்காப்பியர் இவற்றை முட்டுவயிற் கழறல் என்ற துறையாகக் கூறுவர்.” சங்கப் பெரும்புலவர் பாணர் இரவுக்குறிக்கு வரும் முட்டுப் பாடுகளையெல்லாம் அடுக்கி ஒரு பாடலில் கூறுவர். நாள்தோறும் எதிர்பார்த்திருந்த கூட்டம் நாள்தோறும் வந்த புதிய இடையூறு தனால் நடவாமற் போயிற்று என்றும், இங்ஙனம் ஏழுநாள் ஏழு இடையூறுகள் ஏற்பட்டன என்றும், இஃது எங்கள் குறையுமன்று, யார் குறையுமன்று, களவின் குறையே என்றும் ஒரு தலைவி ஏங்கி இரங்கி மொழிகின்றாள். அவள் கூறுவது: 'விழாக் காலத்தில் மக்கள் உறங்கார். இவ்வூரினரோ விழவு இல்லாக் காலத்தும் உறங்குகின்றிலர். இவ்வூரினரும் வாணிகம் பெருத்த அங்காடியினரும் உறங்கினும், வெடுக்கென்று கொத்துகின்ற என் அன்னக்கோ உறக்கம் என்ற ஒன்று வருவதே இல்லை. என்னை இல்லத்துக்கண் செறித்து வைக்கும் அன்னை மறந்து ஒருவேளை உறங்கினும், விழித்த கண்ணராய் வேலேந்தி மூலை முடுக்கெல் லாம் சுற்றித் திரியும் காவலர்கள் சுற்றித் திரிவர். ஒரு சமயம் இவர்கள் உறங்கினும், வால் மடங்காக் காவல் நாய் விடாது 38. மெய்ப்-2 இளம்)