பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் - 495 இப்பாடலில் தோழி வெளிப்படையாகக் கூறும் பொருள் இது: "ஆண் குரங்கு இறந்ததாக அதனை அறிந்த பெண் குரங்கு கைம்மைத் துன்பத்தைப் பொறுக்க மாட்டாது மலையுச்சியில் ஏறி கீழே மாய்ந்து உயிரை விடும். அத்தகைய நாட்டின் தலைவன்' என்பது. லோழி உணர்த்த விரும்பும் பொருள்: நின் நாட்டில் விலங்கு களும் பேரறிவுடையவை. நீ களவின்மீது காதலால் நல்லறமாகிய இல்லறம் கொண்டாய் அல்லை. நின் பெருமைக்கு இது தகாது. அன்றியும், நீ இரவில் வருங்கால் ஆறும் கொடிய விலங்குகளும் அல்லல் இழைப்பின் தலைவியின் நிலை என்னாகும்? ஆகவே, இரவில் வாரற்க என்பது. இதில் தோழி கூற்றில், பொருட் புறத்தவாகிய வேறு பொருள் தோன்றினமையால் இறைச்சி யாயி னமை காண்க. - - (2) தலைவன் பிரிவினால் தலைவி வருந்துகின்றாள். முன் பனிக் காலத்திலும் அவன் வந்திலன். அவன் பிரிவை ஆற்றாது தலைவி மெலிந்து கூறுகின்றாள். - பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின் ஊழ்படு முதுகாய் உழையினம் கவரும் அரும்பனி அச்சிரம் தீர்க்கும் மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.' (பூழ் - குறும்பூழ்ப் பறவை; ஊழ்படு - மிக முதிர்ந்த உழை இனம் - மான் கூட்டங்கள்; அச்சிரம் - முன்பணிக் காலம்), இதில் தலைவி வெளிப்படையாகக் கூறும் பொருள்: பனிக் காலத்தில் மான் கூட்டங்கள் தம் இனத்துடன் தாம் வேண்டி யதை உண்டு இன்பதுடன் வாழ்கின்றன என்பது. தலைவி உணர்த்த விரும்பும் பொருள்: 'இந்தப் பனிக் காலத்தில் யான் துணையின்றி இன்பமும் இன்றித் துன்புறலா னேன்' என்பது. தலைவியின் கூற்றில் வேறு பொருள் தோன்றி இறைச்சியாயினமை கண்டு மகிழ்க. (3) இதுகாறும் களவில் ஒழுகிய தலைவன் வரைவுக்குரிய பொருளுடன் வருகின்றான். செவிலி அவனை ஏற்றுக் கொள்ளு கின்றாள். இதனைத் தோழி செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்துகின்றாள். 15. டிெ - 68