பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Wil. அகப் பாடல் நோக்கியல் அகத்தினைப் பாடலின் அமைப்புபற்றிய விளக்கம் இப்பகுதியில் இடம் பெறுகின்றது. பாடல்களில் தலை மக்களின் பெயர்கள் குறிப்பிடப்பெறும் மரபு இல்லை. முறைப் பெயர்களைக் கொண்டே கூற்றுகள் நிகழும். பாடல்களில் பாடல்களை யாக்கும் கவிஞன் தன் கூற்றாகப் பேசும் வழக்கமும் இல்லை. தலைவன் தலைவி செவிலி, தோழி, பாங்கன், பார்ப்பான் இவர்களே கூற்றுகள் நிகழ்த்துவர். பிறருக்கு இதை நிகழ்த்துவதற்கு இடம் இல்லை. பாடல்களில் அந்தந்தத் திணைக்குரிய முதல், கரு, உரி என்ற பொருள்கள் வரும். முதல், கரு வந்தாலும் வரலாம்; வராமலும் இருக்கலாம். உரிப் பொருள் கட்டாயம் வந்தே தீரும். உரிப் பொருளின்றி அகப் பாடல்கள் அமையா, பாடல்கள் நாடக வழக் காகவும், உலகியல் வழக்காகவும், புலனெறி வழக்காகவும் பாடப்பெறும். ஆதியில்-தொல்காப்பியருக்கு முன்-கலிப் பாவும் பரிபாடலும் அகப்பாடல்களின் யாப்பாக அமைந் திருந்தன. தொல்காப்பியருக்குப் பிற்பட்ட காலத்தில் ஆசிரியம், வெண்பா, வஞ்சிப் பாக்களிலும் பாவினங் களிலும் பாக்கள் அமைக்கப்பெற்றன. அகத்திணைப் பாடல்களில் நாடகக் காட்சிகள் அமைந்திருக்கும். கூற்று முறையில் பாக்கள் அமைந் திருப்பதே இதற்குக் காரணம் என்று கூறலாம். பாடல் களின் அடிகளைக் கொண்டும், சொந்த வாக்கியங்களைக் கொண்டும் சில திணைகளில் நடைபெறும் சில காதற் காட்சிகள் நாடகக் காட்சிபோல் அமைந்திருப்பது சில எடுத்துக்காட்டுகளால் விளக்கப்பெறுகின்றது. உள்ளுறை உவமும் இறைச்சிப் பொருளும் அகப் பாடல்களில் அமைந்து அவற்றின் சுவையை மிகுவிக் கின்றன. இந்த இரண்டு உத்திகளும் சங்கக் கவிஞர்களின் கைவந்த சிறப்பு. இந்த இரண்டு உத்திகளும் பாடல்களில் அமைந்திருக்கும் பாங்கு பல எடுத்துக் காட்டுகளால் விளக்கம் அடைகின்றது. அ-27