பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i36 அகத்திணைக் கொள்கைகள் தயரும் நிலையையும் பொருட்படுத்தாது விருந்தில் கலந்து கொள்ள மறுத்துத் தன் பொருட்டு நடைபெறும் இவ் வினிய விருந்து தனக்கு மட்டிலும் இனியதில்லை என்பதைத் துணிவாகக் காட்டுகின்றாள். மகன் மங்கைப் பருவம் எய்தியபின் பெற்றோர் இயல்யாகவே திருமணம் பேசுவர்: பேச வருபவரை முகனமர்ந்து வரவேற்பர். தக்கவன் என்று தம் மனத்திற்கு உகந்த ஆடவனுக்கு மணம் முடிப்பர். இஃது இன்றும் நடைபெற்று வருவதைக் காணலாம். ஆயின், எந்தப் பெற்றோரும் தம் மகள் களவில் ஒருவனோடு பிணைப்பு உடையவளா என்று முன்னரே அறிந்து மணம் பேசும் வழக்கம் இல்லை. எந்தப் பெற்றோருக்கும் தம் மகள்மீது இத் தகைய ஐயப்பாடு எழுவதற்கு இடனில்லை. அங்ங்ணம் எழுவதும் நாகரிகம் இல்லை. ஆகவே, சமுதாய நெறிப்படிப் பெற்றோர். ஒருவனுக்கு மணங் காணவே முயல்வர். எனினும் களவு நெறிப் பட்ட குமரிக்கு இந்த மரபியலோடு ஒரு போராட்டம் நிகழ்ந்தே தீரும். தன்னைப் பொறுத்த அளவிலும் அவள் இம்மரபியலுடன் போராடித்தான் தன் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும். பெற் றோராயினும் அவர்தம் முடிவினை மாற்றியோ அல்லது மறுத்தோ அல்லது எதிர்த்தோதான் தம் காதல் நெறியை நிலை நிறுத்தி வாழ வேண்டும்; அல்லது சாதல் வேண்டும். சாதாரணமாகத் தலைவன் வீட்டார் தலைமுடி யணிந்து தண்டுன்றிய நரை மூதாளர்களையே தலைவி வீட்டிற்கு மணம் பேச விடுவது தமிழக மண முறையாகும். பெண் கேட்க வரு வாரைப் பெண் பெற்றார். நன்று நன்று என முகமலர்ந்து வர வேற்பர். இதனைக் குறுந்தொகையால் அறியலாம். அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர் நன்றுநன் றென்று மாக்களோடு இன்றுபெரி தென்னும் ஆங்கணது அவையே.* |பிரிந்தோர்-பிரிந்தோரை தண்டுடைகைத்தடியையுடைய, வெண்தலை-நரையையுடைய தலை; சிதலவர்-துணியை யுடையவர்: மாக்கள்-தலைவன் தமர், இன்று-இந்நாள்; என்னும்-முகமன் கூறுவர் ஆங்கண்-அவ்விடத்திலுள்ள.) 118. குறுந்-146,