பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 377 (அரிகால்.நெல் அறுத்து நீங்கப்பெற்ற வயல், ஈரச்செறுசேற்றில்; வட்டி-கடகப் பெட்டி, நெடிய மொழிதல்அரசரால் மாராயம் பெறுதல்; வினைப் பயன்-வினைப் பயனால் எய்தப்பெறுவன; புன்கண்-துன்பம்; மென்கண். இனிய தன்மை, கண்ணோட்டம்) இதில் தோழி, 'ஐய, உம் செல்வமும் பெருமைகளும் உமக்குச் சிறப்பாகா. உம்மை நம்பினோர்மீது நீர் காட்டும் கண்ணோட்டம் ஒன்றே செல்வம் என்று கூறத்தக்க தாகும். சான்றோர் ஒப்பும் செல்வமும் அதுவேயாதலின், தலைவியைக் கைவிடாது தழுவி வாழ்வீராக’ என்று தலைவனை நொந்தும் தலைவிடால் இரங்கியும் கூறுதலைக் காண்க. தலைவி ஊடியிருக்கின்றாள் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு. அவளுடைய உடம்பாடு பெறுவதற்குத் துணை புரியுமாறு தலைவன் தோழியை வேண்டுகின்றான். தோழி அவனுக்கு மறுமாற்றம் உரைக்கும் முறையில் கூறுவது இது: வேம்பின் பைங்காய்என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றணிர் இனியே - பாரி பரம்பிற் பணிச்சுனைத் தெண்ணிம் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் ‘வெய்ய உவர்க்கும் என்றணிர்’ ஐய! அற்றால் அன்பின் பாலே." (தேம் பூ கட்டி-இனிய பொலிவு பெற்ற வெல்லக் கட்டி: இனி-இப்பொழுது: திங்கள்-மாதம், தண்ணிய-குளிர்ந்த பனி-குளிர்ச்சியையுடைய, வெய்ய-வெப்பத்தையுடைய அன்பின்பர்ல்-அன்பின்பகுதி, அற்று-அத்தகையது) இதில் இயல்பாகவே கைப்புடையதாகிய வேப்பங்காய் முன்பு (களவில்) தலைவியின் கைப்பட்ட காரணத்தால் நுமக்கு இனிதாயிற்று. இயல்பாகவே இனிய நீர் இவள் கைப்பட்ட காரணத்தால் இப்பொழுது நுமக்கு உவர்ப்புடையதாயிற்று. அன்றும் இவளே தந்தனள், இன்றும் இவளே தந்தனள். ஆயினும் நூம்பால் இம்மாறுபாடு உண்டாயதன் காரணம் தும் அன்பு மாறியதே யாகும் என்று தோழி தலைவனது அன்பின் திரிபைப் 97. குறுந் 196.