பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 அகத்திணைக் கொள்கைகள் பரிதியம் செல்வம் பொதுமை யின்றி நனவின் இயன்ற தாயினும் கங்கும் கனவின் அற்றதன் கழிவே அதனான் விரவுறு பன்மலர் வண்டுசூழ்பு அடைச்சிச் சுவன்மிசை அசைஇய நிலைதயங் குறுமுடி ஈண்டுபன் னாற்றம் வேண்டுவயின் உவப்பச் செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு எய்திய கனைதுயில் ஏற்றொறுந்திருகி மெய்புகு வன்ன கைகவர் முயக்கின் மிகுதிகண் டன்றோ இலனே." (பரிதிஅம் செல்வம் - புவி முழுதாளும் செல்வம்; இயன்றது. கை கூடியது; கங்குல் - இரவில்; கழிவு - போக்கு: விரவுறு. கலப்புற்ற அடைச்சி - சூடி, சுவல் மிசை - பிடரின் மீது. உறுமுடி - பெரிய கூந்தல்; ஈண்டு - செறிந்த, உவப்ப . மகிழ; இழை - அணி; தோள் சேர்பு-தோளை அணைந்து; ஏற்றொறும் ஏற்குந்தொறும் 1 "புவி முழுதாளும் செல்வம் எய்தப்பெறினும், அது கனவினைப்போல் தோன்றி மறையும் தன்மைத்து. ஆயினும், என் தலைவியின் தோளை அணைந்து உடலோடு உடல் புகுமாறு கொள்ளும் முயக்கத்தினும் மேம்பட்ட பொருளை யான் கண்டதில்லேன்' என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறு கின்றான். தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு." ū; என்ற குறளின் கருத்தும் ஈண்டு எண்ணத்தக்கது. தலைவனின் பிரிவுண்மை அறிந்த தலைவி காதலனை மயங்குந் தன்மையுடைய கோலத்துடன் வந்து அவன்மீது சாய்ந்து முயங்கி வருந்துவதாக இவர் அமைக்கும் காட்சி நீத்தாரையும் நிலைகுலையச் செய்து விழைவிக்கும் திறத்த தாகும்.' தலைவனது பிரிவுக் குறிப்பை அறிந்த தலைவி உண்மையல்லாத புன்முறுவலுடன் தலைவன் பொருள்வயிற் பிரிதலை உடன்படாத எண்ணத்துடன் அவன் அழையாமலே 84. அகம் - 379 85. குறள்-1103 86. அகம்-5,