பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 575 மடலூர்தலை ஆண்கள்தாம் மேற்கொள்ளலாம், பெண்கள் மேற் கொள்ளாலகாது என்று வரம்பு கட்டுவது காதலின் இயல்பை அறியாதவர்களின் செயலாகும் என்பது ஆழ்வாருடைய திரு வுள்ளம்’ என்று கொண்டால் ஆழ்வார் புரட்சியான போக்குடை யவர் என்று கருதலாம். (ii) வெறிபாடிய காமக் கண்ணியார் இந்நூல் பக்கம் (123-134) காண்க. வெறிவிலக்கு பற்றிய நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரம் ஒன்றும், திருவாய்மொழிப் பாசுரங்கள் இரண்டும் ஈண்டுக் காட்டுதல் சுவை பயக்கும். சின்மொழி நோயோ கழிபெருந் தெய்வம்:இந் நோய்இனது என்று இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்றிது; வேல! நில்நீ; என்மொழி கேள்மின், என்அன்னைமீர்! உலகேழும் உண்டான் சொன்மொழி, மாலைஅந் தண்ணந் துழாய்கொண்டு சூட்டுமினே." (சின்மொழி - சில பேச்சுகளே பேசவல்ல இவள், கழிபெரு - மிகப் பெரிய இனது - இப்படிப் பட்டது; இளந் தெய்வம் - சிறு தெய்வம்; நில் - பூசையை நிறுத்துக சொல்மொழி - திருநாமம்; தண்அம் - குளிர்ந்த அழகிய) என்பது திருவிருத்தப் பாசுரம். நாடகப் பாணியில் அமைந் துள்ளது இப்பாசுரம். நடுவிட்டின் ஒரு பக்கம் வெறியாடு களன் அமைத்து வேலன் வெறியாட்டத்திற்கு ஆயத்தமாகின்றான். மற்றொரு பக்கம் வெறியாடலைக் காண்பதற்காக அன்னையரும், 'அரிநரைக் கூந்தல் செம்முதுச் செவிலியரும் பிறரும் குழுமி யுள்ளனர். தலைவியும் தோழியும் வேறோர் அறையில் உள்ளனர். 8. திருவிருத். -20