பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் - - #23 கண்டவர் வருந்துமாறு தலைவன் மடன்மாஊர்ந்து பாட, அதனைப் பெற்றோர் கேட்டு, போர்த் தொழிலில் வல்ல பாண்டியனுக்கு அஞ்சி பகைவர் திறை கொடுக்குமாப்போலே அவர்கள் தம் குடிக்குப் பழுதாம் என அஞ்சி மகட்கொடை நல் கினர் என்பதைப் பாடலில் காண்க. wi. வெறியாட்டு களவின் வழியொழுகும் தலைவி யொருத்தியின் மேனி நாள் தோறும் மெலிந்து வருவதைத் செவிலித் தாய் (நற்றாய்) காண் கின்றாள். இவ்வுடல் வேறுபாடு காப்பு மிகுதியாலும், தலைவியின் காதல் மிகுதியாலும், நொதுமலர் வரைவினாலும், தமர் வரைவு மறுத்ததனாலும் அவள் காதலுக்கு ஏதம் விளைவிக்கக் கூடிய இன்னோரன்ன பிற செயல்களாலும் ஏற்பட்டிருக்கலாம். உண் மையை ஊகித்தறியாத தாய் இவ் வேறுபாடு எற்றினானாயிற்று என்று அறிவரை வினாவ, அவர்கள் குறிபார்த்தலால் தெய்வத் தினானாயிற்று என்று கூறினர். மரபு வழிபட்ட அவள் இவ் வேறுபாடு முருகனால் வந்தது என்று நம்பி முருக னுக்குப் பூசை எடுக்கத் துணிகின்றாள். இதுவே தக்க வழி என்று அக்கம் பக்கத்து முதுப்பெண்டிரும் கூறுகின்றனர். வீட்டில் நல்லதோரிடத்தில் புது மணல் பரப்பிய வெறியாடற் களத்தில் பூசை தொடங்குகின்றது. முருகபூசை செய்விப்பவன் வேலன் எனப்படுவான். இவன் முருகனுக்குரிய வேலை நட்டு பூசை நடத்துபவன் போலும். தினையைக் குருதியிற் கலந்து அதனை நாற்புறமும் தூவி எறிந்து முருகனைக் கூவி அழைப் பான்; வெறியாட்டு என்னும் ஆவேசக் கூத்தை ஆடுவான்: ' கழற்சிக் காயிட்டு நோய்க்குக் காரணம் கூறுவதும் இவன் வழக்க மாகும். இத்தகைய வழக்க முண்மையைத் தொல்காப்பியர், களம் பெறக் காட்டினும்’ என்றும், 95. அகம்-22 (அடி 7-12) 96. ஐங்குறு-248. 97. களவியல்-23 அடி 39 (நச்)