பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் -34 நயஞ்செறிந்த தொடரால் பெயர் பெற்றோர் சில புலவர்கள் தாம் விட்டுப் போன பாடல்களில் அரிய நயம் செறிந்த தொடர்களை அமைத்துள்ளனர். பண்டைப் பெரியோர் இத்தொடர்களை அமைத்து அவர்கட்குத் திருநாமம் சாற்றி மகிழ்ந்தனர். அகத்திணைப் பாடல்களைப் பாடிய இத்தகையோர் ஐவர். இவர்களைப்பற்றியும் ஈண்டு அறிவோம். (). ஓரில் பிச்சையார் தலைவியைப் பிரிந்த தலைவன் வாடை வீசும் பருவத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றிருந்தான். க ட ைம யுள் ள ம் அவன் பிரிந்ததற்கு இசைந்ததாயினும் அவள் அன்புள்ளம் அவன் பிரிவினைப் பொறாது வருந்துவதாயிற்று. அவள் வேறு, தான் வேறு என்று வாழ்ந்தறியாத தோழி ஒருத்தி அவளுக்கு உண்டு. இவள் தலைவியின் துயரைத் தன் துய்ரெனக் கருதுபவள். இவள் அறிவரை நாடி வாடை வீசும் காலம் எப்பொழுது வரும் என் வினவுகின்றாள்; பெரியீர், எம் தலைவர் வாடை வீசும் குளிர் காலத்தே வருவதாகக் கூறி சென்றார். அக்காலம் என்று வரும் என்று அருள் கூர்த்து கணித்துக் கூறுவீர்களாக கூறுவீராயின் உங்கட்குப் புண்ணியம் உண்டு. நீங்கள் உங்கள் உணவிற்காக வேண்டி ஊர் முழுதும் அலைந்து திரியாமல், குற்றம் தீர்ந்து விளங்கும் தெருவில், நாய் உறைதல் அறியா நன்மை மிக்க வீடு 1. புறத்தினைப் பாடல்களைப் பாடிய இத்தகையோர் இருவர். அவராவார் கூகைக் கோழியார் (புறம் - 364), தொடித்தலை விழுத்தண்டினார் (புறம் - 243) என்போ prirourr. 2. இவர்பற்றிய குறிப்பினை இந்நூல் பக். 394 இல் காண்க.