பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 அகத்திணைக் கொள்கைகள் சயிற்றொடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற்(று) ஒலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே." (வில்லோன்-வில்லையுடையவன்; காலன-காலில் உள்ளன: தொடியோள்-தோள் வளையை அணிந்தவள். மேலவும். மேல் உள்ளனவும்; அளியர்-அளிக்கத் தக்கார்; கால். காற்று; வேய்-மூங்கில்; அழுவம்-பாலை நிலம்; முன்னி யோர்-கடந்து செல்ல நினைந்து வருபவர்கள்) தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால் அவ்விருவருக்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறுகின் றனர். கண்டோர் சொல்லியதாக நற்றிணையிலும் ஒரு பாடல் வருகின்றது. வையெயிற்(று) ஐயள் மடந்தை முன்னுற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம் காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே' [வைஎயிறு கூரிய பற்கள்; ஐயள்-மெல்லியள்; முன்னுற்று முன்னே செல்ல விடுத்து; கால்-காற்று, மால்வரை. பெரிய துறுகற்கள்; மிளிர்க்கும்-மோதும்; உரும்-இ.டி) இதில் மடப்பமும் இளமையும் பொருந்திய இவளை முன்னே செல்ல விடுத்துப் பின்னே செல்லும் இந்த இளைஞனின் உள்ளம் காற்றொடுபட்ட மாரிக் காலத்தே மலை பிளக்க இடிக்கும் இடி யைக் காட்டிலும் கொடியது போலும்: என்று கண்டோர் வருந்திக் கூறிச் செல்வதைக் காண்க. குடிப்பிறப்புடையாளை மயக்கி அவள் சுற்றத்தினின்றும் பெயர்த்து அழைத்தோடுகின் றான் என்னும் இறைச்சிப் பொருள் தோன்றுமாறு காலொடு பட்ட மாரி, மால்வரை மிளிர்க்கும் உரும் என்று கூறிள்யுள நயம் உணர்ந்து அநுபவிக்கத் தக்கது. ஐங்குறு நூற்றில் ஒரு பதிகம் முழுவதும் கண்டோர் கூற்றாகவும் பிறவாகவும் அமைந் துள்ளது." 2. குறுந்-7 3, நற்-2 4. ஐங்குறு-36ஆவது பத்து (பாலை)