பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 அகத்திணைக் கொள்கைகள் என்று கூறியுள்ளார். கவிஞன் தனது பாட்டில் புலப்படக் கூறும் உவமையுடன் புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாக என்று தன் உள்ளத்தே கருதி, அப்பாட்டைக் கேட் போர் உள்ளத்திலும் அவ்வாறே நிகழுமாறு செய்து அங்ஙனம் உணர்த்துதற்கு உறுப்பாகிய சிறப்பான சொற்களைக் கொண்டு முடிப்பதாகும் என்று இதனை விளக்குவர் அகப்பொருள் விளக்கு ஆசிரியர். உள்ளுறை யுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும்.” என்ற நூற்பாவால் இதனைப் புலப்படுத்துவர். ஒர் எடுத்துக் காட்டால் இதனை விளக்குவோம். தலைவன் ஒருவன் மகப்பேறு வாய்த்த தலைவியைப் பிரிந்து பன்னாள் பரத்தை வீடே கதி என்று அங்கேயே தங்கிவிடுகின்றான். பின்னர், தலைவி புனலாடிப் புனிறு தீர்ந்தமையை அறிந்து தன் பிரிவாற் றாமையையே வாயிலாகக் கொண்டு தன் இல்லில் வந்து புகுகின் றான். தலைமகள் அவனைக் கண்டு வெகுண்டு கூறுவதாகவுள்ள பாடல். கரும்புநடு பாத்தியில் கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர! புதல்வனை ஈன்றனம் மேனி முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப்பதுவே." (கலித்ததானே தோன்றின; சுரும்பு-வண்டு; மேனி. உடல்; முயங்கல்-தழுவாதே; தெய்ய என்பது அசைநிலை) என்பது. இப்பாடலில் தலைவி, "தலைவா, இந்த இல்லம் எமக் காக அமைக்கப்பெற்றதல்லவே. நுமது காதற் பரத்தைக்கும் இற்பரத்தைக்கும் அமைக்கப் பெற்றதன்றோ இது? கரும்பு நடுவ தற்கென்று அமைந்த பாத்தியில் தாமரை தானாகவே முளைத் துத் தழைத்துத் தன் மலர்த்தேனினால் வண்டுகளின் பசி தீர்ப்பது போல, நான் இவ்வில்லத்தில் இருந்து கொண்டு விருந்தோம்பி இல்லறமாகிய நல்லறத்தைப் புரிகின்றேன். ஒருத்தி இல்லில் ஒருத்தி உறைவது எவ்வளவு இழிதக்கது! கருவுயிர்த்தமையால் 2. நம்பி அகப்-238, 3. ஐங்குறு-65