பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயஞ்செறிந்த தொடரால் பெயர் பெற்றோர் 603 களவொழுக்கத்தினை ஊரிலுள்ளார்கண்டுகொள்வதற்குத்துணை செய்து, களவொழுக்கத்திற்குத் தடை விதித்து மணங்கொள் முயற்சியில் தலைமகனைக் கொண்டு செலுத்தும் தோழியின் முயற்சிக்கும் துணை நிற்கின்றது. இதனால் தோழி நிலவினை 'நெடு வெண் நிலவு என்று பாராட்டினாள் என்ற கருத்து தோன்றப் பாடியுள்ளமையால் இப்பாடலை நல்கிய கவிஞரும் அத்தொடர் அமைந்த பெயரால் நெடுவெண் நிலவினார் என்று வழங்கப் பெறுவாராயினர். (v) பதடி வைகலாச் யதோ ஒரு வினையின்பொருட்டுத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றவன் அவ்வினை முற்றுப்பெற்றதும் தன் ஊர் திரும்புகின்றான். அப்போது பாகனிடம் அவன் 'மணந்து கொண்ட மனைவியொடு மனையில் இருந்து அவளோடு உறங்கி எழுந்த நாட்களே பயனுடைய நாட்கள்; அவைதாம் உண்மையில் வாழ்ந்த நாட்கள்; அவளை நீங்கித் தனித்துறைந்த நாட்கள் யாவும் பயனின்றிக் கழித்த நாட்கள் ஆகும்; அவை யாவும் பதடி நாட்கள்' என்று கூறுகின்றான். இச்சிறு நிகழ்ச்சியைக் காட்டும் குறுந்தொகைச் சித்திரம்: - எல்லாம் எவனோ பதடி வைகல்! பாணர் படுமலை பண்ணிய எழாலின் வானகத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாள் இவண் வாழும் நாளே." (பதடி-கருக்காய்; எவன் என்ன பயனை உடையன; வைகல்நாட்கள்; படுமலை-படுமலைப் பாலை என்ற பாலைப் பண்(12-ல் ஒன்று எழால்-இசை; நல்சுவர்-நல்ல உச்ச ஒலியை ஒப்ப ஒலி வீழ-உண்டாக: புலம்-கொல்லை; 7. டிெ-323.