பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அகத்திணைக் கொள்கைகள் வேகவுணர்ச்சியும் புரட்சி நோக்கும் செயற்படுவதற்கும் இடம் இடமில்லாது போய்விடும். எனவே, ஐந்தினைக் களவிலக்கியம் பாடுவார்க்கும் படிப்பார்க்கும் சுட்டித்தனம் இல்லாக் குழந்தை போலவும். கட்சியற்ற அரசியல் போலவும் உணர்ச்சி வறண்டு தோன்றும். தலைவன் சுற்றத்தார் மணம் பேசவருங்கால்எல்லாத்தலைவியரின்பெற்றோரும்இசைந்துவிடார். மறுத்து விட்ட நிகழ்ச்சிகளும் உலகில் பல இருக்கவே செய்யும். இந்நிலையில் களவிலக்கியம் உயிர்ப்பும் மிடுக்கும் சுவையும் பெறுகின்றது. எங்கே தன் தலைவன் வரைவு வேண்டி விடுத்த தமரைத் தன் பெற்றோர் மறுத்துப் போக விட்டு விடுவரோ என்ற பேரச்சம் தலைவியின் மனத்தில் ஒடிக்கொண்டே யிருக்கும். இத்தகைய ஒரு நிகழ்ச்சியை ஐங்குறுநூற்றுத் தலைவி ஒருத்தியிடம் காணலாம். அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவலனாகிப் பெரிதுநின் மென்றோள் நெகிழவும் திருதுதல் பசப்பவும் பொன்போல் விறல்கவின் தொலைத்த குன்ற நாடற்கு அயர்வர்நன் மனனே.”* |நெகிழ்தல்-மெலிதல்; பசத்தல்-பசலை பூத்தல்; விறல் கவின்-வென்று விளங்கும் பேரழகு; குன்ற நாடன்-மலை நாடன்; அயர்வர்-புணர்த்துவர்) இங்ங்ணம் நெஞ்சங் கவன்ற தலைவியிடம் தோழி வருகின்றாள். மணம் பேசவந்தவர்களை முகமன் கூறி வரவேற்று உபசரித்தலான் மகட்கொடை நேர்வர் என்பதைக் குறிப்பாலறிந்து வந்து அந்த தற்செய்தியைத் தலைவியிடம் கூறுகின்றாள். இதனைப் பாடலில் காணலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் தலைவி தன் பெற்றோரிடம் 'மறுக்காதீர்கள் என்று முன்கூட்டியே சொல்ல அவளிடம் துணிவு ஏற்படாது. அவளுடைய நாணமும் அதற்கு இடந்தராது. பெற்றோர் மறுத்துவிட்ட பின்னர் சொல்வதற்கு அவள் கற்பு காத்திராது. இந்நிலையில் பேதைப் பெண்ணின் மனம் கலக்க முறுவதை உளவியல் நன்கறிந்த அகப்புலவன்தான் எடுத்துரைக்க முடியும் நுட்பமாகவும் எடுத்தியம்ப முடியும். தன்னுடைய களவுச் செய்தியை அறியாத பெற்றோர்க்கு அஞ்சுவது கோழைத் 120. தமிழ்க் காதல்-பக். 75, 121, ஐங்குறு-230