பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் பாடல்கள் 423 தன்னை ஆகிய அறுவரும் கூறுவதாகச் செய்யுள் புனையும் வழக்கம் இல்லை. ஊரும் அயலும் சேரி யோரும் நோய்மருங் கறிநரும் தந்தையும் தன்ஐயும் கொண்டெடுத்து மொழியப் படுதல் அல்லது கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும்." என்ற நூற்பாவால் இதனை அறியலாம். அஃதாவது, இவர் கூற்றாகப் பிறர் சொல்லின் அல்லது இவர்தாம் கூறார் என்பது கருத்து, பேராசிரியரும்' 'கொண்டெடுத்துமொழியப்படுதலல்லது? என்பது, இவர் கூற்றாகப் பிறர் சொல்லின் அல்லது இவர்தாம் கூறார் என்றவாறு' என்று கூறியிருத்தல் ஈண்டு அறியத் தகும். எடுத்துக்காட்டாக, 'எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடிசிவப்ப எவன்இல குறுமகள் இயங்குதி என்னும்’ என்ற அகப்பாட்டடிகளில் தோழி தலைவனுக்குத் தலைவியின் இற்செறிப்பை உணர்த்துங்கால் தந்தையுட்கொண்டு கூறியதைக் காண்க. மேலும், அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்ஐயர்க் குய்த்துரைத்தாள் யாய்; அவருந், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒருபகல் எல்லாம் உறுத்தெழுந்து ஆறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை.” என்ற கலிப்பாட்டடிகளில் தன்ஐயர் வரைத லுக்கு ஒருவாறு உடன் பட்டமையைத் தோழி தலைவிக்கு உரைத்ததை அறிக. இன்னும்: ஊர் அலர்எழச் சேரி கல்லென ஆனாது அலைக்கும் அறனில் அன்னை' என்ற குறுந்தொகை யடிகளில் தலைவி தலைவனுடன் செல்வதால் ஊரில் அலர் எழுதலையும் சேரியில் ஆரவாரம் நிகழ்தலையும் தோழி தலைவிக்குப் புலப்படுத்தலை உணர்க. 9 டிெ - 183 (இளம்) 10. டிெ - 191(பேரா) உரை. 11. அகம் - 12 12. கலி. 39. அடி (20-25) 13. குறுந். 262