பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 அகத்திணைக்கொள்கைகள் அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை தம்இல் தமதுண் டன்ன சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவின் ஒங்குமலை நாடனை வரும்என் றோளே." (அரும்பெறல் - பெறுவதற்கு அறிய, ஆர்பதம் - உண்ணும் உணவு, பெரும் பெயர் உலகம் - சுவர்க்கம்; பெரி இயர் . பெறுவாளாக தம் இல் - தம் வீடு; தமது - தமது முயற்சி யால் ஈட்டிய பொருள்; கினை - கிளை.) இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து : 'இனிமை தரும் சுளைகளை அகத்தே கொண்டிருந்தும் புறத்தே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக் கணி களையுடைய நாடன் வரும் என்று செவிலி கூறினாள்' என்பது. தோழி உணர்த்த விரும்பும் கருத்து: “உள்ளே வரைந்து கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் செய்வதாயிருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான் தலைவன்' என்பது. தோழிக்கூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இறைச்சி ஆதலை அறிக. - - (4) களவில் ஒழுகி வரும் தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிக்கின்றான். தாம் அவன் விருப்பப்படி செய்த நன்றியை மறவாது விரைவில் வரைந்து கொள்ளுமாறு வேண்டு கின்றாள் தோழி. இதனை உணர்த்தும் பாடற்பகுதி: கன்றுதன் பயமுலை மாந்த முன்றில் தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட!' (பயம்முலை-பாலுள்ள முலை; மாந்த-குடித்து நிற்ப; முன்றில்-வீட்டின் முன்னிடம்; பிடி - பெண் யானை: பெருங்கல்-பெரிய மலைகள்) இதில் தோழி உணர்த்திய வெளிப்படைப் பொருள் இது: 'கன்று தன் முலையை மாந்திக் கொண்டேயிருப்பத் தன் பசியைப் போக்குவதற்கும் அக் கன்றுக்குரிய பாலைப் பெறுவதற்கும் பிடி 16. டிெ. 83. 17 டிெ. 225.