பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 அகத்திணைக் கொள்கைகள் திருச்சிற் றம்பலக்கோவையாரில் இறுதியாக மணிவாசகப் பெருமானின் சொல்லோவியங்களில் ஒன்றினைக் காண்போம். களவொழுக்கம் ஒழுகா நின்ற தலைமகன் கழுநீர் மலரைக் கையுறையாகக் கொண்டு சென்று அதனை ஏற்றுக் கொள்ளுமாறு தோழியை வேண்டுகின்றோன். அவள் ஒரு காரணம் கூறி குை யுறையை மறுக்கின்றாள். தோழி கூற்றாக அமைந்த திருப்பாடல் இது: நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி மறமனை வேங்கையென நணியஞ்சு மஞ்சார் சிலம்பா! குறமனை வேங்கைச் சுணங்கொ(டு) அணங்(கு) அலர் கூட்டுபவோ நிறமனை வேங்கை அதள்அம் பலவன் நெடுவரையே." (நறவு - தேன்; மனை - இடம்; நாகம் - யானை, நண்ணி . அடைந்து: மறம் - வீரம்: தனி - மிகவும்; மஞ்சு - மேகம்; சிலம்பன் - குறிஞ்சி நாடன்; சுணங்கு - பசலை; அணங்கு அலர் - தெய்வத்திற்குரிய பூக்கள்; அதள் - தோல், வரை - மலை} இப்பாடலில் தோழி கூறும் வெளிப்படைப் பொருள் இது: தேனிற்கு இடமாகிய வேங்கைப் பூக்கள் மலிந்துள்ள பாறையை யானை சென்று அணைந்து அப்பாறையைத் தறுகண்மைக்கு இடனான புவி என்று எண்ணி மிகவும் அஞ்சும் மேகந் தவழும் மலையினையுடைய தலைவனே, நிறந் தங்கிய புலித் தோலை அணிந்த அம்பலவனது இந்த நீண்ட மலையின்கண்ணே குறவர் மனையில் உளவாகிய வேங்கையின் சுணங்கு போன்ற பூக்களுடன் தெய்வத்திற்கு உரிய கழுநீர் முதலிய பூக்களைக் கூட்டுவரோ?” என்பது. இதன்கண் வேங்கை மலர்களால் மூடப்பெற்றுள்ள கற் பாறையைக் கண்ட யானை அதனைப் புலியென அஞ்சும் நாடன்” எனத் தலைவனுக்கு அமைந்த அடைமொழி இறைச்சிப் பொருள் 25. திருக்கோவை - 96