பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை நாடகக் காட்சிகள் 453 தலைவி (பதறுவாள்போல் நடித்து) ஐயகோ கெட்டொழித் தேன்! ಛ4 g 66T ಶ என்ன இது! நீ அப்பொழுது ஒன்றும் கூறாமல் அவ்விருளில் படப்பையுள் மறைந்து விட்டாயே. பின்பு என்ன நிகழ்ந்தது? தோழி : நம் பெருமான் இல்லத்தினுள் புகுந்தவுடன் யான் அக் காரிருளில் அன்னையின் செயலை அவள் அறியாமல் ஆராயத் தொடங்கினேன். தலைவி அங்ஙனமாயின் நம் களவொழுக்கத்தை நம் ೨r69T கண்கூடாக அறிந்து கொண்டார் என்று சொல். தோழி : தேவி, அஞ்சற்க. துணிந்து அப்படியும் சொல்வதற் கில்லை. - தலைவி. பின் என்ன வென்று சொல்வது? தோழி : அவசரப்படாமல் கேள். அவள் பின்னர் என்ன செய் . வாளோ என்று அஞ்சியே அந்த மையிருளில் அவளைத் தொடர்ந்து சென்றேன். தலைவி சரி; அவள் என்ன செய்தாள்? தோழி : அவள் மேற்கொண்ட செயலால் அவள் நம் களவொழுக் கத்தை அறிந்து கொள்ளவில்லை என்பது உறுதியாயிற்று. பின்னரே ஓரளவு அமைதி கொண்டேன். தலைவி : நேராகச் செய்திக்கு வா. அன்னை என்னதான் செய் தாள்? அதனையும் சொல். தோழி : அன்னை கண்டது ஓரளவு உண்மைதான். மின் னொளியில் ஒரு நொடிப் பொழுதுதானே கண்டாள்? வேலேந்திய நம் பெருமானை நம்மைக் காக்கும் முருகப் பெருமானாகவே கருதி விட்டாள். ஆதலின் அவள் நம் களவொழுக்கத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. தலைவி : அப்படியா? நன்று, நன்று. அப்படி அவள் கருதியிருப்பா ளாயின் அது நம் நற்பேறே. அன்னை பிறழ உணர்ந்ததனை நீ எப்படி அறிந்தாய்? . . . தோழி : சொல்வேன். கேட்டுச் சிரித்து ஒலி செய்து விடாதே. முருகன் என்று கருதியவள் உடனே இல்லத்துள் புகுந்து ஒருபிடி செந்தினையை ஒரு கையிலும், மற்றொரு கையில் பொற்சிரகத்தில் நீருங்கொண்டு முன்றிலில் வந்து முருகவேள் திருக்கோயில் கொண்டருளிய மலையின் அணங்குடை நெடுங் - ^,