பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் - 183 இனியவாம்' என்று மாற்றம் உரைப்பாள். தலைவனும், ஆயின் என் காதலியை உடன் கொண்டு போக வலித்தேன்; நீ இதனை அவளுக்கு உணர்த்தி ஆவன செய்க" என்று கூறுவான். தோழியும் அங்ஙனமே செய்து வருவதாகத் தலைவனிடம் விடை பெற்றுச் செல்வாள். தோழி தலைமகளுழைச் சென்று அவள் குறிப்பறிந்து, எம் பெருமாட்டி, நம் பெருமான் நின்னைத் தம்மொடு தம்மூர்க்குக் கொண்டு செல்லக் கருதுகின்றனர்; நின்குறிப்பு என்னை? என்று உசாவுவள். அதுகேட்ட தலைவி தன் நாணழிய வரினும் தன் கற்பைக் கைவிடாமை துணிந்து, அவனது உடன் போக்கிற்குத் தான் இசையும் குறிப்பைத் தலை சாய்த்து நிலங்கிளையா நிற்கும் நிலைமையால் வெளிப்படுத்துவாள். அளிதோ தானே நாணே, நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே; இனியே வான்பூங் கரும்பின் ஒங்குமணற் சிறுசிறைத் தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காமம் நெறி தரக் கைந்நில் லாதே." (அளிது-இரங்கத் தக்கது: நாண்-நாணம், உழந்தன்று. வருந்தியது; வான்-வெள்ளிய; சிறை-கரை; நெரிதர. நெருங்கி அடித்தலால், வீய்ந்து-அழிந்து; உக்காங்கு-வீழ்ந் தாற்போல; நெரிதர-நெருக்க, கைநில்லாது-போய்விடும்.) என்ற குறுந்தொகைப் பாடல் உடன் போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவி தான் தலைவனுடன் செல்லுதலால் நாண் அகலும் என்று இரங்கிக் கூறுவதாக வந்துள்ளதைக் காண்க. தொல்காப்பியரும், உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று' என்ற முன்னோர் கருத்தைத் தம் நூற்பாவில் பெய்து வைத் துள்ளார். தலைவி உடன் போக்கிற்கு உடன்பட்டதும் தோழி அதற்கு வேண்டுவன புரிந்து முன்பு இரவுக் குறிபோல ஒருவரும் அறியா வகை அவளைக் குறியிடத்திற்குக் கொண்டு செல்வாள். 205. குறுந் 148 - 206 க்ளவியல்-23 (இளம்)