பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 அகத்திணைக் கொள்கைகள் என்ற உரைப்பகுதியால் அறியலாம். தன் முயற்சி பயனின்மை கண்டபின் விட்டுப் பிரியாத தோழமை கொண்டவன் அவன் தலைவனுடன் இணைந்து செல்லுவதை நிறுத்திக் கொள்ளுகின் றான். இங்ஙனம் அகத்தினை உலகில் வரும் பாங்கனின் பங்கு களவின் தொடக்கத்தே நின்று போகின்றது. தலைவனின் இல் வாழ்க்கையின்போது இவனுக்குப் பங்கு உண்டு என்று இலக்கணம் கூறினும் அதற்குச் சான்றாக இலக்கியம் காணப்பெற்றிலது. () தோழி தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையில் பெரும் பங்கு எடுத்துத் துணை புரிபவள் தோழி. அகத்திணை நாடகத்திற்கே உயிர்நாடியாக இருப்பவள் இவளே; இங்குக் காணும் உறுப்பினர் களுள் மிக்க பொறுப்பினை வாய்ந்தவளும் இவளேயாகும். இவள் தலைவியுடன் ஒன்றிய நெஞ்சத்தினையுடையவள். தலைவிக்கும் தோழிக்கும் இடையேயுள்ள நட்புரிமையைத் தலைவனுக்கும் பாங்கனுக்கும் இடையேயும் காணமுடியாது. யாமே பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஓர்உயி ரம்மே."" (இயைந்த-கூடிய துவரா-உவர்த்தல் இல்லாத ஓர் உயிரம் ஒர் உயிரினம்) என்ற தோழியின் கூற்றினால் இதனை அறியலாம். தலைவியினு டையசெயல்கள் யாவற்றையும் இவள் நன்கு அறிவாள். தலைவன், தலைவி, நற்றாய், செவிவி, பரத்தை, பாணன் என்ற உறுப்பினர்க் கெல்லாம் அவரவர்கட்கு அமைவனவற்றை அறிவுறுத்தி அக வாழ்க்கையைச் செப்பஞ் செய்யும் திறத்தினள். தன்னலம் சிறிது மின்றி தலைவன் தலைவியரது நலத்தையே பெரிதும் கருதிப் பல வகை இடுக்கண்கட்கிடிையிலும் சதுரப்பாட்டுடன் செயலாற்றும் திறத்தினையுடையவள். தலைவனைக் கண்டவுடன் மயங்கிவிடும் தலைவி போலன்றி, பன்னாளும் தலைவனின் பண்புகளை ஆய்ந்து 76. அகம்-12,