பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 அகத்திணைக் கொள்கைகள் |பரல் - பருக்கைக் கல்; அவல் - பள்ளம்; படுநீர் - தங்கிய, நீர் மாந்தி - உண்டு; இரலை நல்மான் - ஆண்மான்: நெடு நீர் - ஆழ்ந்தநீர் பொரு கயல் - போராடும் மீன்கள்:கிளவி. சொல்; தெருமரல் - துன்பம்; உய - நீங்க) இதில் "மாலை நேரம் வருவதற்குள் தலைவி இருக்கும் இடத் திற்குக் தேரைச் செலுத்துவாயாக!' என்று தலைவன் பாகனை நோக்கிக் கூறுவதைக் காண்க. இன்னொரு குறுந்தொகைத் தலைவன் பாகனைப் பாராட்டும் முறை நெஞ்சில நிறுத்தும் பான்மையுடையதாய்த் திகழ்கின்றது. “பருக்கையையுடைய கரம்பை நிலத்தில் புது வழியை உண்டாக்கி நோயினால் வருந்தி உறையும் தலைவியை இறந்து படாமல் நல்குதற்குக் காரண மாயினை. இன்று நீ தேரையா தந்தனை? தலைவியையே தந்தனை' என்கின்றான். முரம்புகண் ணுடைய வேகிக் கரம்பைப் புதுவமிப் படுத்த மதியுடை வலவோய் இன்று தந்தனை தேரோ நோயுழந் துறைவியை நல்க லானே"' என்ற தலைவனின் பேச்சினைக் காண்க. நற்றிணையில் இத்தகைய காட்சிகளை நவிலும் பலபாடல்கள் உள்ளன என்று மேலே குறிப்பிட்டோம். அவற்றுள் ஒன்றைக் காண்டோம். செல்க பாக! நின் செய்வினை நெடுந்தேர் விருந்து விருப்புறுாஉங் பெருந்தோள் குறுமகள் மின்னொளிர் அவிரிழை நன்னகர் விளங்க நடைநாள் செய்த நவிலாச் சீறடிப் பூங்கண் புதல்வன் துங்குவயின் ஒல்கி “வந்தீக எந்தை!’ என்னும் அந்தீம் கிளவி கேட்க நாமே.”* (வினைசெய் - இயங்கும் தொழிலையுடைய விருப்பூறுா உம் - எதிரேற்க விருப்பம் கொண்ட குறுமகள் - இளமை யுடைய என் காதலி, அவிர் இழை - விளங்கிய அணிகலன்: நகர்-மாளிகை நடை செய்த நவிலாச் சீறடி - நடத்தலைப் பயின்று அறியாத சிறிய அடிகள்; தூங்குவயின் - தூங்கும் 60. குறுந்-400 61. நற். 221