பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼懿 அகத்திணைக் கொள்கைகள் & என்பது அவர் கூறும் விதி. ஏன்? அவளும் தலைவி தானே! இன்னும் இம்முறை நடைமுறையில் உள்ளதை நாம் நன்கு அறிவோம். ஆசிரியர் மற்றோர் இடத்தில், கொடுமை யொழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவன்.' என்று குறிப்பிடுவர். அக வாழ்வில் தலைவனும் தலைவியும் ஒருவரை யொருவர் புகழ்ந்து கோடலும் உண்டு. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியில் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே." என்பது இதற்குரிய விதி. இத்தகைய மனைவி உயர்வும் கிழவோன் பணியும் கலித்தொகை 128-ஆம் பாடலுள் தலைவி கூற்றாக மிக அழகாகச் சித்திரிக்கப்பெற்றுள்ள தைப் படித்து இன்புறுக. மேலும், - ...' நல்லாய், பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன்; அருளினி." என்ற மருதக் கலியிலும் இதனைக் காணலாம். இதனுள் "கையொடு கண்டை யிழைத் தேனருள் என அடிமேல் வீழ்ந்த வாறு காண்க' என்று உரைப்பர் இளம்பூரணர். புலவியும் ஊடலும் பெரும்பாலும் தலைவிக் குரியவேனும் சில சமயம் தலைவனிடமும் நிகழ்தல் உண்டு. . உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும் புலத்தலும் ஊடலும் கிழவோர்க் குரிய.” என்பது தொல்காப்பியம். தலைவி ஊடிய வழி தலைவன் தேற்றத் தலைவி தேறும் எல்லையை இகந்தனளாயினும் (கற்பில்) அல்ல.குறிப்பிட்டதன் காரணமாகத் தலைவி வாராமை குறித்தும் (களவியல்) தலைவனிடம் ஊடல் நிகழும் என்பர் ஆசிரியர். இறையனார் களவியலாசிரியர் முன்னதை உணர்ப்புவயின் வாரா ஊடல் எனக் குறிப்பிடுவர்.'தலைவியைத் தலைமகள் நெருங்கிப் பணி மொழி பல கூறித் தான் தவறிலன் எனக் கூறியுணர்த்தவும் 21. கற்பியல்-6 28. பொருளியல்-32 29. கவி.95; கற்பியல்-145இல் இதன் உரை காண்க . 30. கற்பியல்-15 31. இறை. கள-16