பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற நெறி - 34; உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுங் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழிவொடு வருதி நீயே இஃதோ ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருநலக் குறுமண் வந்தென இணிவிழ வாயிற் றென்னும்இவ் ஊரே." |செரீஇயும்-செருகியும்; ஆயம்-பரத்தையர் கூட்டம்: துவன்றி-நெருங்கி, வல்சி-ஊதியம்; பெருநலம்-மிக்க அழகு. இதில் ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் - பாக்கியம்' என்பது போன்ற கருத்தால் அறிவர் தலைவனைக் கழறியது காண்க. சில சமயம் அறிவர் தலைவன் பக்கம் நின்று தலைவியைத் தெருட்டுதலும் உண்டு. தேர்தர வந்த தெரியிழை நெகிழ்ந்தோள் ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப் பரத்தமை தாங்கலோ விலனென வறிதுநீ புலத்தல் ஒல்லுமோ? மனைகெழு மடந்தை அதுபுலந்துறைல் வல்லி யோரே செய்யோள் நீங்கச் சில்பதங் கொழிக் துத் தாமட் டுண்டு தமிய ராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுந ராகுதல் அறிந்தும் அறியா ரம்மவஃ துடலு மோரே'. (தெரி இழை-ஆராய்ந்தணிந்த அணிகலன்; புலத்தல்ஊடுதல்; மனைகெழு மடந்தை-குலமகள்; வல்லியோர்வன்மையுடைய மகளிர் செய்யோள்-திருமகள்; சில்பதம்நொய்யரிசி, தேமொழி-இனிய மழலை மொழி; திரங்கு முலை-வற்றிய முலை; உடலுமோர்-பகைப்பவர்:அறியார்அறிவில்லாதவர்) - என்ற ஒரம்போகியாரின் பாடலில் தலைவனது புறம்போக்குத் தாங்காது ஊடல் கொண்டு வாயில் மறுக்கும் தலைவியிடம் அறிவர் வந்து “நீ புலத்தல் ஒல்லுமோ? இதன் விளைவு என்னாகும் குடும்பம் வறுமைப்படும். குழந்தைகள் மெலி 39. குறுந் 295 ஒப்பிடுக. அகம்-369 40. அகம்-316 அ-16